Friday 30 September 2011

காணவில்லை

மூன்று பிரி முடி வகுந்து
பின்னலில் செம்பருத்தி...
இன்று முடி விரித்து அலைகிறாள்
நம் தமிழ் பெண்ணொருத்தி..
மஞ்சள் பூசி குளித்தாய் அன்று
மருந்து போட்டு கிளம்புகிறாய் இன்று...
காணாமல் போன குங்குமமும்
கண்ணீர் விடுகிறதடி...
கொல்லைப்புறத்தின் பூத்த செடி
மெஹந்தியால் கருகிப்போகுதடி
மருதாணி என்ற சொல்லையே
நீ மறந்து போனாயடி...
சோமபானமும் எடுக்கிறாய்
ஏன் எனக் கேட்டால்
நாகரிகம் வளர்ந்துவிட்டது என்கிறாய்..
மேலாடை காணவில்லை
மேற்க்கத்திய மோகத்தால்...
கவலை இல்லையோ உனக்கு
கண்களால் கற்பழித்தால் ...
பெண் என்று உள்ளத்தால்
மட்டும் இருந்தால் போதுமா...?
மறக்காதே பெண்ணே நீயும்
தமிழச்சி தான்...
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
கேட்கவில்லை உன்னிடம்...
பெண்ணாய் வாழ்ந்து பாரடி
புகழ் வந்து நிற்கும் உன்னிடம்...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்

என்னவென்று தெரியாமல்
ஒரு சிந்தனை...
பதில் கிடைக்குமா?
இது ஒருவேளையில்
நிரந்தரமா?
நிரந்தரமில்லை ஆனாலும்
எதற்கு இந்தப் போராட்டம்?
கண்ணீருடனே முடிகிறதே?
எதற்கு இந்தப் பயணம்?
என்னதான் இதன் பதில்?
இதில் வென்றவர் எவரும் உண்டோ?
பதில் கண்டவர் எவரும் உண்டோ?
ஆமா...
வாழ்க்கைனா என்ன?

சுடுகாடு

சாகுறவரைக்கும்தான் சாதி
என்று நினைத்துக்கொண்டிருந்தேன்...
சாதிக்கென தனி சுடுகாடுகள்
இருக்கின்றனவாம்...
புதைத்த பின்னும்
எரித்த பின்னும்
சாதி பேசுவது இந்த
உயிர்ப்பிணங்கள்தான்...

எங்கே மனிதம்?

உச்சிப்பொழுதின் வேளையில்
கடற்கரையின் நிழலில்
சுண்டல் விற்ற அந்த
ஒற்றைச் சிறுவன்...
அன்னதான மணி அடிக்க
அலறியடித்து வந்த கூட்டத்தில்
தடுக்கி விழுந்த பிஞ்சுக்கால்கள்...
போக்குவரத்து நெரிசலில்
கைக்குழந்தையுடன்
இளம்பெண் ஒருத்தி...
கல்லுடைத்துக் கைகள்
மரத்துப்போன சிறார்கள்...
அடுக்கிவைத்த செங்கலுடன்
ஆறு வயது சிட்டுக்குருவி...

ஆர்ப்பரித்த கைத்தட்டல்களுடன்
பாராட்டி விடைபெற்றனர்
மனமில்லாத பணம்பெற்றவர்கள்...
சுவறில் இருந்த ஓவியங்கள் மட்டும்
உயிருடன் வாழ்ந்துகொண்டு
இருந்தன...
ஓவியனின் கைவண்ணத்தில்...

Tuesday 27 September 2011

ஏமாற்றம்

இடைவிடாத மழையில்
காகிதக்கப்பல் விட்டு
கவிழ்ந்ததைக்கண்டு
ஏமாந்த எனக்கு...
இருதயக் காதலை
அவளிடம் எதிர்பார்த்து
ஏமாறத் தெரியாதா??

ஒட்டுண்ணி

எனக்காக நீயும்
உனக்காக நானும்
பிறக்கவில்லை...
எதோ காதல் என்னும்
ஒட்டுண்ணி...
எங்கோ ஒளிந்திருந்து...
கிடைத்த இதயத்தில் ஒட்டி
இருக்கும் ரத்தத்தை உறிந்து
காதல் நோயை உண்டாக்கிவிடுகிறது...

Monday 19 September 2011

என்கடன் பணியே

அரங்கநாதன் கோலத்தில்
அவள் வீற்றிருக்க...
அவள்பதம் தொட்டேன்...
என் கைவசம் அவளின்
கால்கள் தஞ்சம் புகுந்தது...
நான் செய்த பாவங்களும்
புண்ணியமாயின போலும்...
என்கைப்பதம் அவளின்
கால்களில் விளையாட...
விரலுக்கு சொடுக்கெடுக்க
விடுதலையடைந்தது வலிகள்...
அயர்ந்த அவள்
கண்ணுறங்கிப் போனாள்...
என் தாய் உறங்கியபின்
தாய்மையை உணர்ந்தேன்
என்னிடம்...

Sunday 18 September 2011

என்செய்வோம் இனி

நட்ட மரத்தை வெட்டியாச்சு...
வெட்டிய மரத்த வித்தாச்சு...
காத்துல கரியமிலம் கலந்தாச்சு...
கார்பன் மோனாக்சைடும் சேந்தாச்சு...
ஓசோன்ல ஓட்டைய போட்டாச்சு...
எல்லாத்தையும் ஆட்டையப் போட்டாச்சு...
குடிதண்ணியும் காசாச்சு...
இனி உள்ளபோற காத்தும் காசாகும்...
அணு உலைகள் வச்சா
அணுதினமும் ஆபத்துதாகும்...
கட்டுக்கட்டா சேத்த பணம்
நீ கட்டையில போகும்போது வருமா..?
இயற்கைய நீ அழிச்சா
உன் சந்ததிய அது சும்மா விடுமா?

Friday 16 September 2011

யோசித்துப்பார்

பாடிப்பறக்கும் பச்சைக்கிளி
கட்டைப்பெட்டியில் உள்ளே
எடுக்கும் சீட்டுதான்
உன் எதிர்காலமா?
ஏழு மிளகாயும்
அதன் கீழிருக்கும்
எலுமிச்சையும் உனக்கு நன்மையா?
உனக்கும் நாய்க்கும்
திருமணம் செய்தால்
மாரி பொழிந்துவிடுமோ?
ரேகைகள் மட்டும் வாழ்க்கையெனில்
கரம் இல்லாதவனுக்கு வாழ்க்கை இல்லயா?
உன்மேல் உனக்கில்லாத
நம்பிக்கைதான் இத்தனை
அவலங்களுக்கும் ஆரம்பம்...
யோசித்துப்பார் தோழா...


யோசித்துப்பார்

பாடிப்பறக்கும் பச்சைக்கிளி
கட்டைப்பெட்டியில் உள்ளே
எடுக்கும் சீட்டுதான்
உன் எதிர்காலமா?
ஏழு மிளகாயும்
அதன் கீழிருக்கும்
எலுமிச்சையும் உனக்கு நன்மையா?
உனக்கும் நாய்க்கும்
திருமணம் செய்தால்
மாரி பொழிந்துவிடுமோ?
ரேகைகள் மட்டும் வாழ்க்கையெனில்
கரம் இல்லாதவனுக்கு வாழ்க்கை இல்லயா?
உன்மேல் உனக்கில்லாத
நம்பிக்கைதான் இத்தனை
அவலங்களுக்கும் ஆரம்பம்...
யோசித்துப்பார் தோழா...


இயற்கை அன்னை

கை நீட்டி அடித்தபின்
கட்டித்தவழும் அன்னைபோல...
கரைபுரண்டு வந்தது
வெள்ளம்... அடங்கியபின்னும்
அழகாய் பாய்ந்தது...
இயற்கையின் அழகு...


Saturday 10 September 2011

கடிதம்

எடுத்து வைத்த தாள்
விரல் நடுவில் பேனாவும்
தன்னிலை மாறாமல் அப்படியே...
இறந்து போன ரோஜாவோ
காய்ந்து கருகப்போகிறோமா?
அவள் கைசென்று
நசுங்கிவிடுவோமா?
இல்லை அவன் கையால்
அவள் கூந்தலில் குடியேறி
விடுவேனோ..?
இல்லையேல் இவனுடைய
கல்லறையில் வைத்துக்கொள்வானோ?
என்றெல்லாம் எண்ணத்தொடங்கியது...
ஆயிரம் ஆசைகளும் காதலும்
என்னுள் இருந்து முதல் வார்த்தை
எழுதமுடியவில்லை... ஆரம்பித்தேன்...
"மன்னிப்பாயா" என...

நிர்ணயம்

கோபத்தின்
உச்சம் கண்ணீர்...
உணர்வுகளின்
உச்சம் காமம்...
விதியின்
உரிமை மீறலே காதல்...
உனக்கும் எனக்கும்
எந்தவொரு நிர்ணயமுமில்லதாது
நட்பு..

Friday 9 September 2011

பறக்கும் முத்தம்

அவளின் உதடுகள்
மெலிதாக பிதுங்கும்
ஓசையும் பூகம்பமாகுது
என் நெஞ்சில்...
மெல்லக் குவித்து
ஊதுவதும் சூறாவளியாகிறது...
பறக்கும் முத்தம்...

Thursday 8 September 2011

சுயநலம்...

ஒவ்வொருவருக்கும்
தன்னுள் இருக்கும்
மனிதனைக் காட்ட
மிகவும் கடினமாக
இருக்கிறது வாழ்க்கை...
சுயநலம்...

முட்டாள் காதலன்

அரிதாரம் பூச
தேவையில்லாத ஒரு முகம்...
மை பூசும் கண்கள்
பல நேரத்தில்
மனதையும் பேசும்...
எதிர்பார்ப்புகளோடு காண்கிறாளா
அல்லது
என்னை எட்ட நின்று
கவனிக்கிறாளா என
கணக்கிடமுடியாது...
முழம் போட்ட பூவை
தாளம் போட்டு ஆடச்செய்யும்
அவளின் கூந்தல்...
சில நேரங்களில் அவள்
முனுமுனுப்பதுகூட ராகங்களாய் ஒலிக்கும்...
அந்த முட்டாள் காதலனுக்கு...

Wednesday 7 September 2011

ஒரு நொடி

எனக்கான நிமிடம்
தொடங்கி முடிந்தது
ஒரு நொடியில்...
காதலாய்...

நான் நீ

வா என அழைத்து
கை பிடித்தாய்
வாழ்க்கையில்...
என்னில் தொடங்கி
உன்னில் முடிந்து
நாமாக கலந்தது
நம் காதல்...

Tuesday 6 September 2011

அம்புலி வாழ்க்கை

நிலவுடன் முதல் சந்திப்பு... அப்பொழுது அகவை நான்கு... தமிழ் என் நாவில் நர்த்தனம் ஆட நிலவினை ந்திலா என சொல்லுவேன்.. மடிமேல் என்னை வைத்து அரியணை அமரச்செய்தால் அன்னை.. நிலவில் அமர்ந்து பாட்டி வடை சுட்டாள் என ஆரம்பித்தாள் , குறுக்கிட்ட நான் "வதய யாது வாந்துவா?" என, காகத்தின் மேல் பழியிட்டு கதை தொடர்ந்தது... ஆண்டுகள் உருண்டோடிய பின் எனக்கு அகவை பதினாறு ஆக... கரித்துக்கொண்டிருந்தாள் அன்னை என் நடவடிக்கைகளை... வெளிவந்த நான் தனிமையில் நிலவும் தனிமையில்... ஒளிகொடுத்தது என் பாதைக்கு... உணர்ந்தேன் என்னை... காலம் கடந்து முதிர்ந்தேன்... அகவை அறுபதைக்கடந்து தளர்ந்தது... அம்மா கூறியது நினைவுக்கு வந்தது இறந்தால் எல்லாம் நிலவுக்குதான் செல்வோம்... அவளைக் காணப்போகும் மகிழ்ச்சியில் மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருந்தேன்.. நாமும் அம்புலி தான் பௌர்ணமியாய் ஜனனம் அமாவாசையாய் மரணம்...

Sunday 4 September 2011

குடைக்குள் மழை

இலைகள் இழந்த மரக்கிளையை
போல் மின்னல்கீற்று...
கருஞ்சேலையான வானத்தைக்
துகிலுரித்துச் செல்ல..
வான்மகள் அழத்தொடங்கினாள்...
மானம் காக்க இடியாய்
கதற ஆரம்பித்தாள்...
எதையும் கேக்காத கிருஷ்ணா
குடை பிடித்து நடக்க ஆரம்பிக்க...
தன்னைத் தனித்துவிட்ட
ராதையை நினைத்து அழத்தொடங்கினான்...
குடைக்குள் மழையாய்..


மலர்

கையில் ரோஜாவுடன் நிற்க
மௌனமாய் கோபித்தாள்
மெல்லத் திரும்பினாள்
பூவை நானே வைக்க வேண்டும் என...
பூத்து இறந்த பூவும்
காதல் பூத்திட உதவியது...




Saturday 3 September 2011

அன்று

எந்தவித கவலையுமில்லை..
அன்பான சுற்றம்...
வேண்டுதல் இல்லை
ஆனாலும் மண்சோறு....
நீண்டதூர தள்ளுவண்டிப் பயணம்...
உண்ணாவிரத போராட்டம்...
விதிகளில்லை...கேள்விகளில்லை...
கேள்விகளுக்கு பதிலளிக்க விதிகளில்லை...
அவளின் முத்தங்கள் இல்லாத நாளில்லை...
உலகமே அவளது மடியில்...
அவளும் மழலையாய் மாறினாள்
என்னுடன் விளையாடி...
வண்ணமயமான மழலைக்காலம்...


Friday 2 September 2011

ஏக்கம்

அகல விரிந்த இந்த நிலப்பரப்பில்...
கலைத்துவிட்ட கருங்கூந்தல் போல
முகில்கள் கலைந்திருக்க...
சல்லடையாய் கொட்டும் மாரியில்
ஒருதுளி அளவாவது அவள் காதல்
இருக்காதா என ஏங்குகிறேன்
பதில் தெரிந்துருந்தும்...



Thursday 1 September 2011

விடை தேடி

விடை சொல்ல விழைந்தேன்
உன் கண்ணீருக்கு...
விடை தெரிந்தும் மறுத்தேன்
என் காதலுக்கு...
விடை தேடி அலைவது
உன் காதலுக்கும்
அதற்கு காரணியான
என் காதலுக்கும்...