Tuesday 25 October 2011

ஒளி தரும் நாளா இது?

வண்ண வண்ண மத்தாப்புகள்
ஊரையே ஒளிரச்செய்து
எங்கெங்கோ வீற்றிருக்கும்
கடவுளுக்கெல்லாம் விளக்குகள் ஒளிர...

கைகளில் வளையங்கள்
புத்தம் புது ஆடைகள்...
காரமும் இனிப்பும் கலந்து
பல சுவையில் பதார்த்தங்கள்...

விண் முட்டும் வானங்கள்....
வெடித்துச்சிதறும் காட்சிகள்...
வீதிதோறும் மகிழ்ச்சியில்...
தீப ஒளித் திரு நாளில்...

பட்டாசுகள் பல செய்து...
மத்தாப்புக்கு மருந்து செய்து...
கைகளில் மருந்து சென்று
கழுவாத கையோடு
கால் வயிறு சோறுக்காக
கல்விச்சாலை செல்லமுடியாமல்..
கால்வயிறு பசி ஆறாமல்..
தின்ற சோறும் நோய்தந்து
உடலின் இருந்த சக்தி குறைந்து...
திக்கற்று இருந்த மழலைகள்
ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்தனர்
விண்முட்டிய வானவேடிக்கை
கீழ்வந்து சாம்பலாய் வீழ்ந்ததை...

-வான்போல் வண்ணம்கொண்டான்.


Monday 24 October 2011

எதிர்வீட்டு ஜன்னல்...

கருத்துப்போன வானம்
மஞ்சள் பூசி மாற வேண்டிய
தருணம் அது...
வருணனுக்கு அது
பிடிக்கவில்லை போல...
கதிரவனுக்கு கதவைத் திறக்காமல்
தாழிட்டு அடைத்து வைத்திருந்தான்
சில நேரம்..
தூரலாய் சில நேரம்...
பொழிவாய் சில நேரம்...
ஜன்னலோரத்தில் இருந்தே
அனைத்தையும் ரசித்தேன்...
எதிர்வீட்டு ஜன்னலில்
அவளும் எனக்கு ஜோடியாய்...
தூரல் தட்டி விளையாடிக்கொண்டிருந்தாள்..
அவள் விரல்பட்ட துளிகள்
கடல் செல்லாமலே முத்தாக மாறும்
மோட்சம் பெற்றன..
விரல்படாத துளிகள்
மண்ணில் விழுந்து
கதறி சத்தம் எழுப்பின...
தாமரை இலைமேல் நீர்த்துளிபோல்
கன்னத்தின் மேல் தனித்துளியாய்
வைரம்போல் மிளிர்ந்தது
மழைத்துளி...
மழை ஓய்ந்த பின்னரும்
சாரலாய் என் மனதை
நனைத்துக்கொண்டிருந்தாள் அந்த
எதிர்வீட்டு ஜன்னல்...

Saturday 22 October 2011

அர்த்தநாரி

கோவிலுக்கு போய் நிக்குறாங்க
பிள்ளை வரம் கேக்குறாங்க

ஆணாய் பொறந்தா
ஆனந்தமா வளர்க்குறாங்க

உள்ளுக்குள்ள மாறுதல் வந்து
உள்ள இருக்க பெண்மையை
உணர்ந்தா
ஒதுக்கிவைக்க பாக்குறாங்க

படிக்கப்போனா அங்கயும் ஒதுக்கிவச்சு
ஒதுக்குப்புறமா வர சொல்லுறாங்க
கத்துக்க வந்த எடத்துல
கட்டில் காட்டி சிரிக்குறாங்க

ஒஸ்சுன்னு கூப்பிட்டு
ஒம்போதுனு கேலி பண்ணி
கைத்தட்டி கூப்பிட்டு
கண்ட இடத்துல கை வக்கீறாங்க...

கோவிலுக்கு மட்டும் போன
வாய் தொறந்து சொல்லுறாங்க
"அர்த்தநாரியப்பா என்ன நீதான் காப்பாத்தனும்"

என் மடியில் என்னவள்

நான் சொல்வதெல்லாம் செய்கிறாள்
நான் சொல்லாததையும் செய்கிறாள்...
தன்னையும் காத்துக்கொள்கிறாள்
காத்துக்கொள்வதற்கு என் உதவியும்
தேவை எனக் கூறுகிறாள்...
இசை உதிர்த்து என்
நிலை மாற்றுகிறாள்....
என்னைப்பற்றி மட்டுமில்லாது
உலகத்தின் தகவலையும்
தன்னுள் வைத்துள்ளாள்...
அவ்வப்பொழுது அடம்பிடிப்பாள்...
ஆனாலும் விட்டுக்கொடுப்பாள்...
கற்பனைக்கு காரணங்களைத் தருகிறாள்
கற்பனைக்கு எட்டாத விசயங்களையும்
கண்ணுக்கு காட்சியளிக்கிறாள்...
மடியிலும் கட்டிலிலும் என் விரலொடு
தவழ்வதே அவளுக்குப் பிடிக்கும்...
என் அழகிய மடிக்கணினி...


எது காதல்?

முதுகுப்பையில் புத்தகங்கள்
கனத்திருக்க
கைபிடித்து நடந்துசென்ற
பருவம்வராக் காதல்...

புகைமண்டலம் கிளம்பி
மூச்சடைக்கும் சாலையில்
மூச்சிறைக்க ஓடி வந்து
படியில் இடம்பிடித்து
அவளின் மனதிலும் இடம்பிடித்த
பேருந்துக்காதல்...

பேருந்துக்கு இவள் காத்திருக்க
இவள் பதிலுக்காக அவன்
காத்திருக்கும் தினசரி
பேருந்து நிறுத்தக் காதல்...

நேற்று பெய்த மழையில்
குடைபிடித்து நடந்துவந்த அவளின்
அழகு கண்டு அவன் கொண்ட
அரை நொடிக் காதல்...

இணையத்தில் இவன் எழுத
இவன் எழுத்தினை இவள் ரசிக்க
எண்ணங்கள் பரிமாறிக்கொண்ட
முகம்காணா காதல்...

காதல் தோல்வியில் அவன் கசிந்துருக
கண்ணீர் துடைத்தபின் அவள்கொண்ட
அதிசயக்காதல்...

விளையாட்டாய் வாழ்வை நினைத்து
கட்டிலை மட்டும் பரிமாறிக்கொள்ளும்
சில கருமம்பிடித்த காதல்...

எது காதலென்றே தெரியாமல்
காதல்தான் உயர்ந்தது எனக்
கங்கணம் கட்டி
பெற்றோரையும் ஒதுக்கித்தள்ளும்
கிருக்கர்களின் காதல்

எழுதிவைத்தேன் என் மனதில்
எது என் காதல்?
எங்கே என் காதல்?

விட்டுவிடு

இது மனக்குழப்பம் அல்ல..
மனிதன் வாடிக்கையாய் கொள்ளும் குழப்பம்...
உன் காதல் பெரியதா என்பதல்ல என் கேள்வி..
உன் காதலுக்கு நான் உரித்தானவனா
என்பதே என் கேள்வி...
விடை கேட்கிறாய் என்னிடம்..
கேள்வி கேட்கிறேன் உன்னிடம்...
இனி எங்கு செல்வது
என தெரியாமல்
குழம்பி நிற்கிறேன் உன்
விழி வாசலில்...
இன்னும் சில யுகங்கள்
ஆனாலும் எனக்கு விடை தோணாது
உன் கேள்விக்கு...
அதற்கு மாறாய் என் கேள்விகள்
அதிகமாகிக் கொண்டிருக்கும்...
யாரடி நீ எனக்கு...?
எதற்கடி நான் உனக்கு...
எவ்விடம் நோக்கி நான் செல்கிறேன்..
எதற்காக என்னை நீ தொடர்கிறாய்...
என் முடிவு தெரியாத பேதை நீயடி...
என் முடிவு தெரிந்த முட்டாள் நானடி...
ஆறடிக்குளிக்குள் விழக்காத்திருக்கும்
உயிர்ச்சவம் நான்..
உன் மனக்குளிக்குள் விழுவேன்
என எண்ணாதேயடி...
இனியும் என்னைத் தொடராதே...
தோல்வியை ஒப்புக்கொண்டு
நானும் உன்மேல்
காதல் கொண்டுவிடுவேன்...

ஏனடி..?

நான் எங்கோ பார்க்கும்பொழுது
எனை மட்டுமே பார்த்து...
என் பார்வை உன்னிடம்
திரும்பும்போது , வேறெங்கோ பார்த்தது...
ஏனடி...?

பிழை என்னிடம் இருந்தாலும்,
"நான் தான் இதற்கு
காரணம்" எனக்கூறியது...
ஏனடி..?

குறுஞ்செய்தி வரவில்லை என்றவுடன்
கோபம் காட்டியது
ஏனடி...?

எனக்கு காய்ச்சல் என்றவுடன்,
உண்ணா நோன்பு இருந்தாய்...
ஏனடி...?

அணைக்கும்பொழுது புன்முறுவல்
பூத்தாய், உதடுகளின் மீது
இதழ் பதித்தபோதெல்லம்
விழிகளில் மழை பொழிதாய்
ஏனடி...?

விடைபெறும் போதெல்லாம்
என் விரல் பிடித்தாய்
ஏனடி...?

இத்துனை நடந்தும் இன்று
நான் தனிமையில்.
ஏனடி..???

கிடைக்காத என்ன?

விட்டுச்செல்லும் அவளுக்கே வாழ்க்கை கிடைக்கிறது...
விட்டுத்தரும் அவனுக்குக் கிடைக்காத என்ன?

தன்னுள் கோடி ஆசைகள்
அவனைக் காணும்போதெல்லாம்
தெரிவிக்கத் தூண்டும்
அவா அவளுக்கு...
நீயே என் உயிர்
இதயத்தில் தோன்றிய காதல் இது
உன் கண்களில் வாழ்ந்து பார்க்க ஆசை...
உன் விரல் பிடித்து அழ ஆசை...
உன் மடி மீது இறக்க ஆசை..
எனக்கான வாழ்வு உன்னுடன்
இந்த நெற்றியில் வரப்போகும்
குங்குமமும் உன் விரலால்தான்
என்றெல்லாம் தெரிவிக்க அவாக்கொள்கிறாள்...
கிடைத்த வாய்ப்புகளை எல்லாம்
பறிகொடுத்து விட்டாள்...
இன்றாவது தெரிவித்துவிட
வேண்டும் என்று முடிவு செய்து...
வெள்ளைத்தாள் எடுத்துத் தன்
வெள்ளை மனக்காதலை எழுதினாள்
காதலைக் கூற முடியாத
பேசா மடந்தை...

இப்படியும் ஒருத்தி

பாட்டியின் மடியில்
அசந்து உறங்கியிருந்தாள்
ஐந்து வயது அழகுக் குழந்தை

அவள் அன்னை எங்கே என
அவள் தந்தை தேட
அவளின் தாயோ தேடிக்கொண்டிருந்தாள்

பத்தாயிரம் ரூபாயில்
மலிவுவிலைப் பட்டுச்சேலையை...

கடைசி கேள்வி

நிலவில் முதலில்
அமெரிக்கனா கால் வைத்தான்?

எதற்காக ஏழை பணக்காரன்
ஒப்பீடுகள் மக்களுக்குள்?

எதற்காக இந்த சமுதாயத்தில்
சாதி சமய ஏற்றத்தாழ்வுகள்?

பட்டுச்சேலையின் மீதும்
தங்க நகையின் மீதுமுள்ள மோகம்
பெண்களுக்கு என்றுதான் குறையும்?

மக்களுக்கு சோறு போட
முடியாத நாட்டில்
எதற்கு செவ்வாய் கிரக ஆராய்ச்சி?

எத்தனையோ கேள்விகள்
கேட்டுவிட்டேன்
கேட்டுக்கொண்டும் இருக்கிறேன்...

எத்தனை கேள்விகளுக்கு பதில் கிடைத்தாலும்
என் கடைசி கேள்வி இது...
என் சாவுக்கு அவள் வருவாளா?

யாரிவள்

அழகாக இருக்கிறாள்..
அலட்சியத்தால் வெறுக்க வைத்தாலும்
அடம்பிடித்து நிற்கிறாள்...
கனிவாகப் பேசுகிறாள்
இருந்தாலும்
கவனிக்காதது போல
பாவனைகள் புரிகிறாள்..
மனம் திறந்து பேச முயன்றும்
மனம் ஒத்துழைக்காமல் கைவிடுகிறாள்..
விதியின் சதியால் மாட்டிக்கொண்டேன்...
எனினும் விடுபட எண்ணமில்லை...

Thursday 6 October 2011

ஒரு குடை

உன்னைச்சுற்றிப் பெய்யும்
மழையில்...
உஷ்ணக் காற்று
என்னைச்சுற்றி...
என்மேல் விழுந்த
மழைத்துளி
வெப்பமானது உன்
உதட்டசைவில்...
உன் விரல் சூட்டில்
குளிர் நனைகிறேன்
நான்...
ஒரு குடையில்
இரு உயிர்கள்...