Tuesday 31 May 2011

நான் சாமானியன்...








தத்துவங்கள் சொல்லுவதும்...
தவறுகள் சுட்டிக்காட்டுவதும்...
விமர்சனம் புரிவதும்...
ஏசுவதும்...
நெடுங்கவிதைகள் கூறுவதும்...
மமதையிலும்...மணியான பேச்சிலும்...
அடுத்தவனுக்கு விளங்காததை சொல்ல...
நான் சாணக்கியனோ... சாக்ரடீஸோ அல்ல...
மனதில் தோன்றியதை சொல்லும்...
சாமானியன்...
மேலே கூறப்பட்டவர்களுக்கு...
கிருஷ்ணா-"அவன் ஒரு முட்டா பய டா"...

என் வாழ்க்கை...

..

ஓரணுவில் தொடங்கி
ஒரு நிமிடத்தில் 
சாம்பலாகும் வாழ்க்கைக்கு நடுவில்...
குடும்பம்...
காதல்...
நட்பு...
பணம்...
வெற்றி...
துரோகம்...
தோல்வி...
நம்பிக்கை...
இன்னும் எத்தனையோ...
எதற்கு இந்த போராட்டம்...?
ஏனென்றே தெரியாமல் செல்கிறது 
என் வாழ்க்கை...

Monday 30 May 2011

பொய் கவிதை





இரு விழியையும்
அடைத்துக்கொண்டு இருந்தவள்
நீதான்...
இதயத்தின் வாசலில் 
நின்றுகொண்டு...
இடைமறித்தது நீதான்...
மூளை நரம்பின்
முடிவில் நடனமிட்டு...

காதல் சொல்ல தயங்க வைத்ததும்
நீதான்..
இப்படி எல்லாம்..
என்னை பொய் கவிதை எழுத வைத்தவளும்
நீதான்...

Sunday 29 May 2011

நான் முட்டாள்












நான் இன்னும் 
முட்டாள் என்று 
நினைப்பதால் மட்டுமே
மனித நிலையில் இருக்கிறேன் 
என்று விளங்குகிறது..
அறிவாளிகளிடம் கேளுங்கள்...
விளக்கம் கிடைக்கும்...














மறந்து போன உறக்கம்..
தொலைந்துவிட்ட கனவுகள்...                              
அண்டிக்கிடக்கும் ஆசைகள்...
தடுமாறும் வார்த்தைகள்...
காணாமல் போன கவிதை...
இவை அனைத்தும் சொல்கிறது...நீ என் காதலி என்று...

Saturday 28 May 2011

சபிக்கப்பட்டவர்கள்








என்னைப் பொறுத்தவரை
இந்த உலகில்
வாழும் ஏனைய மக்கள்

அனைவரும்...
ஏதோ ஒரு வழியில்
காதலால் சபிக்கப்பட்டவர்கள்...

அய்யோ...

Dont ask me questions u Intelluctuals...i am not like u...

அவ உன்ன காதலிக்கிறாளா?
அவளுக்கு உன்ன புடிக்குமா?
நீ காதலிப்பது அவளுக்கு தெரியுமா?
தெரியாத பதிலுக்கு
ஆயிரம் கேள்விகள்...

Friday 27 May 2011

என் காதல் இது...



காதலில்...
என்னை காதலிக்காதே 
என்று கூறக்கூட
உனக்கு உரிமை கிடையாது...
என் காதல் இது...

Thursday 26 May 2011

நமது உலகம்...


























நாம் இருப்பது...
இறவாத நேரங்களில் மட்டுமே
நமக்கு ஏன் பிறந்தோம் 
என்று சிந்திக்க வைக்கும் 
உலகம் ...
உறங்காத நேரங்களில்
உறக்கத்தைப்பற்றி உத்தேசம் 
வழங்கும் மனிதர்கள் கொண்ட 
உலகம் ...
நட்பு காதல் பாசம்
என அனைத்தையும் 
பகுத்துப்பார்க்க தெரியாத உலகம்...
உண்டி சுருங்கி... 
உடலுடன் எலும்பு தெரியும்
அனேக மக்களும்...
நான்கு பேர் கொண்ட
குடும்பத்திற்கு...
இருபத்தி நான்கு அடுக்கு மாளிகை
கட்டி வாழும் ....
பண மனிதன் வாழும் உலகம்...
இதுவரை விளக்கமே கிடைக்காத 
காதலுக்கு...
விளக்கங்களும் விவரங்களும்
அள்ளித்தரும்...
ஆச்சரிய உலகம் ...
இதெல்லாம் நிறைந்ததால்தான்...
இது நமக்கு உலகமாகவே தோன்றுகிறது...

Wednesday 25 May 2011

this is my love story...can u believe...??? u have to...

என் காதலில் நடந்தது இதுதான்...
மன்னிக்கவும்...
எனது வாழ்க்கையில்..

Tuesday 24 May 2011

தேடல்




இருட்டில் மாட்டிக்கொண்ட
நிழலைப்போல்
என் காதல்...
எங்கே என்று தேடிக்கொண்டே
இருக்கிறேன் நானும்..






Saturday 21 May 2011

ஒரு வரியில் காதல்..


















காதல் ...
எனக்குத் தெரிந்த
ஒரு வரிக் விளக்கம்..
அகிம்சையான இம்சை...

Thursday 19 May 2011

திமிர் புடிச்சவ...












காதல்னா என்னன்னு ஒருத்தன கேட்டேன்..
காதல்னா கடவுள்னு சொன்னான்..
இன்னொருத்தன் எல்லாத்துக்கும் மேல் அப்படின்னான்..
அவகிட்ட போய் காதல்னு தான் சொன்னேன்..
செருப்பெடுத்து காட்டுறா..
திமிர் புடிச்சவ...











காதல்னா என்னன்னு ஒருத்தன கேட்டேன்..
காதல்னா கடவுள்னு சொன்னான்..
இன்னொருத்தன் எல்லாத்துக்கும் மேல் அப்படின்னான்..
அவகிட்ட போய் காதல்னு தான் சொன்னேன்..
செருப்பெடுத்து காட்டுறா..
திமிர் புடிச்சவ...

முத்தம்



இரு இதழ் பள்ளத்தாக்கில்
விழும் செயல்
காதலோ காமமோ...
உலகமே அதில் உறைந்துள்ளது...

முதல் மழை என்னை அழைத்ததே...



முதன் மழைக்காலம்...
மழை அன்று எனக்கு மிகவும் புதிது...
வழக்கம் போல் குளிக்க சென்றேன்...
இடி முழக்கம் பயம் அளிக்கவில்லை..
அது என்னவோ இசைமுழக்கமாய் தோன்றியது...
கீழே விழும் மழைத்துளிகளோ...
அதற்க்கு ஏற்ப நடனம் புரிவதுபோல் இருந்தது...
மின்னல் விழுந்த அடுத்த நொடி
மானத்தை மறைத்துக்கொண்டு ஓடி வந்தேன்..
அம்மா..யாரோ...நான் குளிக்கும்போது 
போட்டோ புடிக்குறாங்க...
என்றேன் வெள்ளந்தியாய்...

தப்பா???



கடவுளுக்கே பூசை செய்து 
பள்ளியறை அனுப்புகிறான் ஒருவன்...
கடவுளின் பூசை அறையினையே
பள்ளியறையாய் மாற்றினான் இன்னொருவன்...
இதில் நம் நாட்டில் 
காமம் பேசினால் குற்றமாம்...

Wednesday 18 May 2011




வாழ்க்கையின் 
கருப்பு வெள்ளைகள்
      அனைத்தும்  வானவில் போல வண்ணமயமானவை...

புத்தன்
ஆசைப்பட்டானாம்...
இந்த உலகில் எவரும்
ஆசைப்படக்கூடாது என்று..
அவனுக்கே தெரியவில்லை...
அவனும் ஆசைப்படுகிறான் என்று...

Tuesday 17 May 2011

வெற்றி




உனக்கொரு முகவரி வேண்டுமெனில்...
உன் வழியில் செல்...

Monday 16 May 2011

நம் காதல்




எனக்கும் உனக்குமான 
காதல் தான் இது...
அப்புறம் ஏன் இதுல
உன் அப்பனையும் ஆத்தாவையும் 
இழுக்குற...

என் காதலி



என் அன்னைக்கு...
நான் உனக்கு காட்ட விரும்புவது
உலக அழகியோ
தேவதை தோற்றம் கொண்டவளோ இல்லை...
உன்னைப்போலவே 
என்னை கவனித்துக்கொள்ள
எனக்கான ஒருத்தி இவள்தான் என்று..
இவள் என் அன்னையின் பிரதி என்று....