Friday 25 November 2011

இது நம்ம பாட்டு மச்சி

கண்ணப் பாத்தா உன்னப் பார்ப்பா
நீயும் பாத்தா திரும்பி பார்ப்பா
பாவம் நம்ம பசங்க தான்பா
இந்த நெலம எங்களுக்கு ஏன்பா?

பஸ் ஸ்டாண்டு ஓரம் வந்தா
முடிய ஒதுக்கி நிப்பா லந்தா
கையில் ரோசாப்பூவ நீயும் தந்தா
உன்னோட லைஃப்போ
கோ கோ கோ கோவிந்தா!

நைட்டு புல்லா பேசனும் மாமா
காலையில் குட் மார்னிங் சொல்லணும் மாமா
பர்சு ஃபுல்லா இருக்கணும் மாமா
இல்லாக்காட்டி அம்போதான் மாமா!

வாரக்கடைசி பீச்சுல மீட்டிங்
மாசத்துக்கு ஒரு டேட்டிங்
100 மெசேஜும் விடாம சேட்டிங்
கடசில அடிக்கும் மணிதான்
ஊஊஊஊஊ டிங் டிங்...(கண்ணப் பாத்தா உன்னப் பார்ப்பா)

மிஸ் யூ நீயும் சொல்ல வேணும்
மிஸ்டு காலும் குடுக்க வேணும்
அசைன்மெண்டும் எழுத வேணும்
அரியர் நீயும் வைக்க வேணும்

பர்த்டேக்கு க்ரீட்டிங் கார்டு
பேலன்ஸ் போன ரீசார்ஜ் போடு
கேப்விடாம கடலையப்போடு
மூணு முடிச்சு கடைசியில் போடு
இல்லாக்காட்டி இல்லாக்காட்டி..
அடுத்த பிகருக்கு ரூட்டப்போடு..
(கண்ணப் பாத்தா உன்னப் பார்ப்பா)

Wednesday 23 November 2011

அக்னி சாட்சி

வீதிமுழுதும் வண்ணத் தோரணங்களும்
விளம்பரப்பலகையில் உன் முகமும்
பச்சை மாவிலைத் தோரணமும்
பக்கத்தில் சாய்ந்திருந்த வாழைமரமும்...

பத்து வீட்டுக்குள் சந்தோசக் கூச்சலும்
பக்கத்து ஊருக்கும் கேட்கும் ஒலிபெருக்கியும்
பேருந்து நிறுத்தங்களில் சொந்தங்களும்...
நேற்றுத்தடவிய சந்தனமும்
அதற்குத் துணையாய் ரத்தச்சந்தனமும்...

பல பந்தி செல்லும் உறவுகளும்
உன் அப்பன் பெருமை பேசும் மக்களும
நடந்துமுடிந்த சடங்குகளும்
இனி நடக்கப்போகும் சடங்குகளும்...
லட்சம் லட்சமாய் வரதட்சணையும்
லட்சணமான சிரிப்புடன் என் தங்கமும்...

அடித்துச்சொல்லுதடி இந்த உலகிற்கு
மகிழ்வாய் நடக்கும் உன் திருமணத்தை...

காத்திருந்த முட்டாளும்
அக்கினிக் குண்டத்தில் கிடப்பானடி
அரைப்படி சாம்பலாய்....

சுற்றி வா மூன்று முறை,
வந்துவிட்டு உறுதிசெய்துகொள்
என்னை தலைமுழுகிவிட்டாயென
என் இன்னுயிர்த்தோழியே....

Saturday 19 November 2011

நடைபாதைப் பிணங்கள்

காதலுக்கு இரையான சிலர்
காமத்துக்கு இரையான சிலர்
காசுக்கு இரையான சிலர்
துன்பத்திற்கு இரையான சிலர்
இன்பத்துக்கு இரையான சிலர்
துறவுக்கு இரையான சிலர்
களவுக்கு இரையான சிலர்
கள்ளத்தொடர்புக்கு இரையான சிலர்
வெற்றி தோல்விக்கு இரையான சிலர்
வாழ்க்கையை வெறுத்த சிலர்
கள்ளுக்கு இரையாகி
கண்ணெதிரே வீதியோரத்தில்
கேட்பாரற்றுக் கிடக்கின்றனர்
நடைபாதைப் பிணங்களாய்...

ஒரு வரிக்கூத்து-2

சில நிமிட நடைபயணமே என் வாழ்க்கையாய் தெரிகிறது-அவளுடன் ஒரு நடைபயணம்.


மரத்துப்போன கண்கள் மறந்துபோன தூக்கம் மாற்றமில்லா இரவு.


அவளிடம் விடைபெற்ற முத்தம் என்னிடம் சிறைப்பட்டது.


எரிந்து சாம்பலான கணவன் குடியேறினான் மனைவியின் நெற்றியில் திருநீராய்...


இதயங்களின் அழுகுரல் மொத்தமாய் ஒலிக்கிறது கெட்டி மேளத்தில்-கட்டாயக் கல்யாணம்


துளைகளற்ற புல்லாங்குழலாகிப...

Saturday 12 November 2011

ஒரு வரிக்கூத்துகள்-1

புகைந்தோ புதைந்தோ போகிறவன் வாயிலும் புகை-சிகரெட்...

நீர் அருந்துகிறேன் அளவுக்கு அதிகமாய் அழுவதற்கு...

உனக்கு முத்துப்பற்கள்தான்..அதற்காக பேசக்கூடவா மாட்டாய்-திமிர்க்காரி...

விபத்தில் அடிப்பட்ட குழந்தை இறந்தபின் வாகனத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் இறைவன் நிழற்படமாய்...

முடியப்போகும் வாழ்க்கை வெட்டிவிட்டே ஆரம்பிக்கிறது தொப்புள்கொடியில்...

இமையாய் உன் இதழும் விழியாய் என் இதழும்...

சிறைக்குப் பின் பூங்காற்றாய் ஜன்னலுக்குப்பின் அவள்...

தோல்வியை நீ மறுத்தால்,வெற்றி உன்னை மறுத்துவிடும்...

"ம்ம்ம்" உன்னால் பிடித்துப்போன புதிய தமிழ்ச்சொல்.

தனக்கும் பூட்டு உண்டியலுக்கும் பூட்டு,ஊரைக்காக்குமாம் சாமி...

உனக்கும் உரிமையில்லை காரணம் இது என் காதல்.

முதுகில் புத்தகம் மூளையில் அவள்-பள்ளிப்பருவக்காதல்.

மதம் பரப்புவனிடம் சென்று கேட்க வேண்டிய ஒரு கேள்வி...என்று நீ மனிதத்தை பரப்புவாய்?

Wednesday 9 November 2011

உடலெங்கும் உன் முத்தம்

வெட்டவெளியில் வெண்ணிற ஆடையில்
துச்சமில்லாமல் சென்று கொண்டிருந்தேன்..
அறிவிப்பின்றி நீ வருவாய் என
எதிர்பாராமல் நடந்துசெல்ல
ஆர்ப்பரித்துக்கொண்டு என்னருகே வந்தேய்...

என் உச்சி நீ தொட்டு
என் உள்ளமும் உள்ளும்
குளிரச்செய்து....
எல்லை மீற ஆரம்பித்தாய்...

விரல்தொட்டாய் என விட்டுப்பார்த்தேன்...
நீ இதழ் தொட்டு...
என் ரோமம் பிடித்து
என்னுள் நீ உட்செல்ல...
எங்கிருந்தோ இருந்து எட்டிப்பார்த்தது
என்னுள் ஒளிந்திருந்த வெட்கம்...

என்னைக் காப்பாற்ற நான் முயல...
என் காதில் நீ முத்தமிட்ட ஈரம்
காயும்முன் மாறி மாறி முத்தங்கள்
பொழிந்து தள்ள...
என்னை மறந்தேன் நான்...

உடலெங்கும் உன் சுவடுகள்..
என்னை நீ ஆட்கொள்ள...
முற்றிலும் நனைந்திருந்தேன்
செல்ல மழையே ...

உடலெங்கும் உன் முத்தம்

வெட்டவெளியில் வெண்ணிற ஆடையில்
துச்சமில்லாமல் சென்று கொண்டிருந்தேன்..
அறிவிப்பின்றி நீ வருவாய் என
எதிர்பாராமல் நடந்துசெல்ல
ஆர்ப்பரித்துக்கொண்டு என்னருகே வந்தேய்...

என் உச்சி நீ தொட்டு
என் உள்ளமும் உள்ளும்
குளிரச்செய்து....
எல்லை மீற ஆரம்பித்தாய்...

விரல்தொட்டாய் என விட்டுப்பார்த்தேன்...
நீ இதழ் தொட்டு...
என் ரோமம் பிடித்து
என்னுள் நீ உட்செல்ல...
எங்கிருந்தோ இருந்து எட்டிப்பார்த்தது
என்னுள் ஒளிந்திருந்த வெட்கம்...

என்னைக் காப்பாற்ற நான் முயல...
என் காதில் நீ முத்தமிட்ட ஈரம்
காயும்முன் மாறி மாறி முத்தங்கள்
பொழிந்து தள்ள...
என்னை மறந்தேன் நான்...

உடலெங்கும் உன் சுவடுகள்..
என்னை நீ ஆட்கொள்ள...
முற்றிலும் நனைந்திருந்தேன்
செல்ல மழையே ...

Tuesday 8 November 2011

கையாலாகாதவன்

நடுநிசி ஆசைகளும்
மரத்துப்போகுதடி...
வெடித்துவரும் கண்ணீரும்
வெளிவர மறுக்கிறதடி...
எனக்குத் துணையாய் மழையும் அழுகிறதடி...
உன் விரல் பிடித்த நிமிடங்களை...
என் கண்ணில் நீ
உனைப் பார்த்த நிமிடங்களை...
வந்து வந்து போகுதடி உன் எண்ணம்...
விட்டுப்போய்விட்டாய் என்று உன்னை
விடவும் முடியவில்லை...
விட்டுச்சென்ற உன்னை வந்து
கேட்கவும் முடியவில்லை...
எனக்கான வாழ்க்கை எங்கே என?



Sunday 6 November 2011

பாடங்கள்

தலைவனும் தலைவியும் கூட
உதவி புரிவாளாம் தோழி...
அதற்குப் பெயர் களவு
என ஆரம்பித்தாள் தமிழ் ஆசிரியை...

பக்கத்து அறையில்
ஒரு ஹைட்ரஜனுடன் காதல்
இன்னொரு ஹைட்ரஜனுடன் கள்ளக்காதல்
ஒரு அவள் ஆக்சிஜன் செய்வதே
தண்ணீரின் காரணி
என ஆணியடித்துப் புரிய வைத்தான்
ஒரு நவீன இளைஞன்...

ஒரு மூளை அறையில்
என்னவென்றே புரியாத குழந்தைகளுக்கு
ஆங்கிலத்தில் ஆற்றிக்கொண்டிருந்தாள்
ஒரு தமிழ்ப்பெண்...

"x" என்பது எப்பொழுதும்
ஒரு தெரியாத கருமமென
கவலைப்படுத்திக்கொண்டிருந்தாள்
கணிதக்காரி ஒரு அறையில்...

ஒன்றிற்கும் உதவாத வரலாற்றில்
நடந்த போரினைக் கண்முன்
வைத்துக்கொண்டிருந்தான் ஒரு
ஆசிரியப்பெருமான்..

ப்ளாஸ்டிக்கினால் உலகம் மாசுபடும்
என்று சொல்லிக்கொண்டே
தன்னுடைய பையில் சுற்றி வைத்திருந்த
ப்ளாஸ்டிக் பையினை வெளியில் எறிந்தாள்
ஒரு சுற்றுப்புற அபிமானி...

இத்தனையும் அங்கங்கு நின்று கொண்டு
பார்த்துவிட்டு தொழில்பார்க்கச் சென்றான்
பள்ளிக்கு அருகே செருப்பு தைத்து
வாழ்க்கை நடத்தும் சிறுவன்...

Thursday 3 November 2011

நித்திரைக்கு முன்...

ஒவ்வொரு இரவும்
உறங்கச்செல்லும் முன்
என்னிடம் எழும் கேள்வி...'

நாளையேனும் உனக்கான வாழ்க்கை
கிடைக்குமா?
எனக்கான வாழ்க்கை கிடைக்குமா?
எனக் கேட்டுக்கொண்டே தூங்கச்செல்லுது
இந்த உறங்கா மனது...

என் கண்கள் குளமான பின்னர்
நனைந்திடா வேண்டாம் என் தலையணை
என கண்கள் நினைக்க...

துடைத்துவிடலாம் என்று உதவ
வரும் என் கரங்களில்
நேற்று துடைத்த கண்ணீரின்
ஈரம் இன்னும் காயாமல் இருக்க...
வற்றிப்போகுது என் வார்த்தைகள்...

அழுகுரல் கேட்டுவிடக்கூடாது என
எத்தனை முறை முயன்றாலும்...
தோற்றுப்போகிறேன் நான்...

கண்கள் அயர்ந்தால் மட்டுமே எனக்கு
தூக்கம் எனத்தெரிந்து கொண்டபின்...
பழகிவிட்டது அழுகையும் காரணங்களும்...
அதனால் நான் பெற்ற ரணங்களும்...

உறங்கி எழுந்தபின் உதடுகள்
சொல்லத்துடித்தாலும்,உதவ மறுக்கும் மூளை...
எனக்கான காலை என்று விடியும்???


Wednesday 2 November 2011

காக்கிச்சட்டை கணபதிகள்

ஊரக்காக்க உன்ன விட்டா
உலை பொங்கும்போதே சோறக்கேக்குற...
இருக்குறவனுங்ககிட்ட கையேந்தி ...
இல்லாதவங்ககிட்ட கை நீட்டுற...
வீட்டுக்கு காவல் வச்சா
பூட்ட ஒடச்சு தேடுற...
குத்தவாளிக்கு கும்பிடு போட்டு
வங்கிக்கணக்க ஏத்துற...
கால் கட்டைவிரல பாக்கவே
காட்டுத்தனமா மூச்சுவிடுற...
மாசக்கடைசியில மண்டைய சொரியுற...
எவனாச்சும் வந்தா வழிப்பறி செய்யுற...
பல்லக்காட்டி பிச்சை எடுக்குற...
சத்தியப்பிரமாணம் எல்லாம் சரியா செய்யுற
சல்யூட் மட்டும் பணத்துக்காக அடிக்குற...
சாவுக்கு வந்தா நெத்திக்காசையும் திருடுற...
உன் உடைக்கான மரியாத உனக்குத் தெரியுமா?
ஊர் கூடி எடுத்துச்சொன்னா புரியுமா?