Thursday 30 June 2011

என் அழகிய கள்ளி...


எனக்கும் அவளுக்குமான 
சண்டை தொடர்ந்து கொண்டே இருந்தது..
நீதான் காரணம்...
இல்ல நீதான் காரணம்...
எங்கள் விவாதம் 
தொடர்ந்து கொண்டே போனது...
விவாதம் முற்றினால்,..
கைகலப்பு...
அருமையான ஒரு அடியுடன் அரங்கேறியது...
இப்படியே செல்ல..
கோபத்தில்...
அணைத்து...தந்தேன் ஒரு முத்தம்...
அமைதியானாள்...
அடுத்த நாள்...
சந்தித்த முதல் நிமிடத்திலேயே...
சண்டை போட தயாரானாள்...
என் அழகிய கள்ளி...

Friday 24 June 2011

விடியல் வந்தது... வெளிச்சம் எப்பொழுது???




விடியல் வந்தும்
வெளிச்சம் இல்லை...
வெள்ளையன் சென்றுவிட்டான்
இங்கு என் நாடு
கொள்ளையனிடம் மாட்டி 
தடம் மாறி தடுமாறி 
செல்கிறது...
பிச்சையெடுப்பவன் கூட மூன்று 
வேளை சாப்பிடுகிறான்...
தன்மானத்திற்காக உழைப்பவன்...
ஒரு வேளை உணவு மட்டும் பார்க்கிறான்..
ஒரு வேளை உணவு
கிடைக்காத மக்களோ கோடி பேர்...
ஒரு வேளை உணவிற்க்கு 
ஆயிரம் ரூபாய் செலவு 
செய்யும் மேல்குடி மக்களும் கோடி பேர்...
"தாழ்த்தப்பட்டவர்கள்"
இது அரசாங்கத்தில் இருந்து மட்டுமல்ல
அகராதியிலிருந்து எடுக்கவேண்டிய வார்த்தை...
அரசியல் தத்துவங்கள்
இன்னும் எழுத்துக்களாகவே உள்ளது...
அண்ணாவும் காந்தியும்
படேல்லும் நேருவும்
இருந்த இடத்தில்...
இனி பாட்டில் சங்கர்
துப்பாக்கி ராமு கத்தி கார்மேகம்
போன்ற "சான்றோர்" வரும் காலம் 
வெகுவிரைவில்...
அன்று ஊழல் என்பது 
அகராதியில் ஒரு வார்த்தை...
இன்று ஊழல் என்பது...
அரசியலில் அன்றாட வாழ்க்கை...
கல்விக்கு சன்மானம் வழங்கிய
மனிதர்கள் இருந்த இடத்தில்
சன்மானம் தந்தால் மட்டும்தான் 
இனி கல்வி 
என்றாகிவிட்டது...
"விடுதலை கிடைத்தது...
விடியல் வந்தது...
வெளிச்சம் எப்பொழுது???"

Monday 20 June 2011

என் வாழ்க்கை...



என்றும் இற்வாமல் 
என்னுடன் இருக்கும் 
என் காதல்...
கண்கள் பொங்கினாலும்
உதடுகள் ஒட்டிடும்
என் சிரிப்பு...
ஆயிரம் பேருடன் இருந்தாலும்
நான் உணரும் 
தனிமை...
இப்படியே நகர்கிறது 
வாழ்க்கை...

Friday 17 June 2011


விளக்க முடியாத கேள்வி 
வாழ்க்கை என்றால்...
அதன் விளக்கம் அளிக்கும் பதில்...
"காதல்" என சொல்லுவேன்...

Monday 13 June 2011

இச்...


கவிதைகள் பற்றாக்குறை...
கற்பனைகளும் வற்றிப்போய் இருந்தது...
என்ன செய்வது...
எதை யோசிப்பது...
எதுவும் கிட்டவில்லை...
அவளிடம் போய் கேட்டேன்...
அருகில் அழைத்து...
அணைத்து...
இச்...
அப்போ தோணுச்சு...
பேசாம முதல் கவிதைலயே
ஆரம்பிச்சு இருக்கலாமோ???

Saturday 11 June 2011

கிடைத்துத் தொலைத்தது


அட...
ஆங்காங்கு வர்ணக்கொடிகள்...
இனிப்புகள்..
மிட்டாய்களும்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
தொலைக்காட்சியில் சிறப்பு திரைப்படங்கள்..
வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டே 
நானும் எடுத்தேன்...
ஒரு மிட்டாயை...
கிடைத்துத் தொலைத்த 
சுதந்திரத்துக்காக...

Friday 10 June 2011

ஏன் பிரிந்தாய்???


என் அன்னையிடம் 
கூட இந்த அன்பும்
பரிவும் கண்டதில்லை...
உன்னைப்போல் 
என்னைக் காத்து அரவணைத்துக்கொள்ள
உலகில் எவரும் இல்லை...
என்னை நீ காதலித்த அளவு...
எவராலும்...ஏன் என் அன்னையால்
கூட முடியாது...
இத்தனையும் சொல்லிவிட்டு...
ஏன் பிரிந்தாய்???

Thursday 9 June 2011

என்றும் கனவா


உன்னுடன் 
நான் புரிந்த
ஒவ்வொரு சின்னச்சின்ன
சண்டைகளும்...
சின்னஞ்சிறு ஊடல்களும்..
இன்னும் ஒரு சில 
வெளிக்கூற முடியாத 
அழகிய சரசங்களும்...
ம்ம்ம்ம்...
என்றும் கனவாய் போனதேனோ????

Wednesday 8 June 2011

அவளின் நாணம்.


கால் விரல்கள் 
தரையில் கோலம் இடவில்லை...
விரல் நகங்கள் அவளின் 
வெள்ளை சுவரின் இடையில் 
மறியல் செய்யவில்லை..
என்னை உற்று நோக்கும்
கண்களும் அவளின் சிரமும்
கீழ்செல்லவில்லை...
இருந்தும் புரிந்தது எனக்கு 
அவளின் நாணம்...
என்னை முத்தமிட்டு
அவளின் உதட்டை அவளே
தொட்டு சிரித்தபொழுது...

Tuesday 7 June 2011

சிறகொடிந்த பறவை


எதிர் வீட்டு அண்ணா...
அம்மா ஒடம்பு சரியில்லமா...
நாளைக்கு போறேன்மா ஸ்கூலுக்கு...
பக்கத்து வீட்டு தம்பி...
அப்பா எனக்கு காய்ச்சலா இருக்கு...
ஸ்கூலுக்கு நாளைக்கு போறேன்ப்பா...
அடுத்த வீட்டு அக்கா...
அம்மா நான் வீட்டுப்பாடம் பண்ணல...                                       
போகல ஸ்கூலுக்கு...
இவளோ...
அம்மா...நேரம் ஆச்சு...
சீக்கிரம்...
அனைவரும் கிளம்பினர் பள்ளிக்கு...


இவளோ...
தனது தூக்குச்சட்டியைத் தூக்கிக்கொண்டு
கிளம்பினாள்...
சிறகொடிந்த பறவையாய் 
கட்டிட வேலைக்கு...

Saturday 4 June 2011

பெண்கள் முட்டாள்கள்...



பெண்கள் முட்டாள்கள்...
கோவித்துக்கொள்ள வேண்டாம்...
கோபங்களும் வேண்டாம்..
உங்களை ஏமாற்ற கோடி கவிதைகளும்...
சக்கரை வார்த்தைகள்...
பணம் நிறைந்த பை...
இவையெல்லாம் கூட தேவை இல்லை...


ஒரே ஒரு காவித்துணி மட்டும்
போதும்...

Thursday 2 June 2011

இசையின் ராஜா



இசையின் இருப்பிடம்...
தமிழிசையின் புகலிடம்...
ஹார்மோனியம் என்ற கருவிக்கு
காதல் சொல்லிக்குடுத்த கவிஞன்...
திருவாசகம் என்ற தமிழுக்கு...
இசை தந்து... தமிழுக்கு புகழ் தந்தாய்...
இசைக்கு அழகிய வார்ப்புகளை தந்து
என் கடன் பணி செய்வதே...
என்ற கூற்றுக்கு சான்றானாய்..
தமிழிசையில்...
நீ தனி இசைத்தொகுதி...
இசையராஜா என்று உன்னை
அழைக்க ஆசை...
இருப்பினும் இசையின் ராஜா
ஆகிவிட்டாய்...
ஒரு சிலர்க்கு மட்டுமே 
இந்த வாக்கியம் பொருந்தும்...
"வாழ்த்த வயதில்லை... வணங்குகிறோம்..."
உனக்கும்...

நான்








நல்லவன் என்பதும்...
கெட்டவன் என்பதும்...
வெறும் தமிழ் வார்த்தைகள்...
மனிதர்கள் இல்லை...
நானும் அப்படித்தான்...