Wednesday 28 December 2011

பரிசு

உன்னால் முடியாமல் போனாலும்
நீ பிறருக்கு பரிசளிக்கு முடியும்
அதன் பெயர் புன்னகை.
-வான்போல் வண்ணம்கொண்டான்.

Monday 26 December 2011

வேற்றுமை

வெள்ளிச்சங்கில் வெண்ணிறத்தில்
பால் நிறைந்து
பட்டுச்சேலையில் அம்மா நிற்கிறாள்...
வேண்டாம் வேண்டாம் என அடம்பிடிக்க
அள்ளிவைத்து ஊட்டுகிறாள்..
ஒரு பங்கு உள்செல்ல...
ஒன்பது பங்கு உதட்டுவழி வழியுது..

ஒட்டிய வயிறும்...
காய்ந்து கருத்த உதடும்...
வறண்டு போன அந்த சிறிய நாக்கும்...
கிழிந்துபோன கந்தையும்
சாராயத்தில் மூழ்கிப்போன தந்தையும்..
பாத்திரம் தேய்க்கப்போன அன்னையும்..
நாயாய் பிறந்திருந்தாலும் எதாவது
கிடைத்திருக்குமோ என அவள் ஒருபுறம் எண்ண..

இதை இரண்டையும்
வேடிக்கை பார்த்தபடி
காத்துக்கொண்டிருந்தாள்
பட்ஜெட் போட்டு அவளின் அன்னை
வாங்கிவரும் பாக்கெட் பாலுக்கு....

Sunday 25 December 2011

என்னடா இவன் கிறுக்கிட்டு இருந்தவன் பொறுப்பா என்னமோ எழுத ஆரம்பிக்குறானு பார்க்குறீங்களா! என்ன செய்ய, என்னால் முடிந்த ஒரு சில தகவல்களை தோழமைகளுக்கு எடுத்துக்கூற வேண்டாமா?

நான் விசயத்துக்கு வருகிறேன். கிழக்கிந்திய கம்பெனி என்பது நம் வரலாற்றுப்பாடங்களின் மூலம் நாம் அறிந்ததே. வாணிபம் செய்ய வருகிறோம் என கதவைத்தட்டியவர்கள் கால் பதித்த, நாம் ஆண்ட மண்ணிலேயே நம்மை அடிமையாக்கி பாடுபட்டு பெற்ற சுதந்திரமும்(!!!) அதன் வரலாறும் படித்து அதை பழைய பொருள் விற்கும் கடையில் போட்டு ஒரு ப்ளாஸ்டிக் குடமோ, பஜ்ஜி சொஜ்ஜியோ வாங்கி சாப்பிட்டு முடித்துவிட்டோம்.

என் கேள்வி இதுதான். இப்பொழுது மட்டும் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.வேலை செய்வது இந்தியாவில் . விலை போவது வெளிநாட்டில்.

வாஸ்கோடகாமாதான் இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்தான் என்று கண்மூடித்தனமாய் நம்ப வைத்த கல்வி அதன்பின் அவன் செய்த செயல்களை மறைத்ததேனோ. இதையும் ஒரு கலை சார்ந்த ஒருவன் சொல்லி தெரிந்துகொண்டேன் "உருமி" என்ற ஒரு மலையாளப்படத்தின் மூலம்.

ஆள்வது இந்தியன் .
ஆட்டுவிப்பது அமெரிக்கனும் மற்றவனும்.
வாழ்வதும் வளர்வதும் அவர்கள்.
வளர்ச்சி என்ற வார்த்தையை மட்டுமே
படித்துக்கொள்ளுது நம் உதடுகள்.

எப்படியெல்லாம் நம் அரசு அவனுக்கு பந்தி வைக்கிறது, யாரெல்லாம் விருந்து சாப்பிடுகிறார்கள் என்பது இனி வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு சொல்லிவிடுகிறேன்.உங்கள் கருத்துக்களும் எண்ணங்களும் தேவை.

அதற்கு முன்பு இந்தியாவை ஏன் அவர்கள் தேர்ந்தெடுத்தனர் என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா?
தெரிந்துகொள்வோமே.



இந்தியா - வணிகரீதியான சில தகவல்கள்.

உலகின் இரண்டாம் மிகப்பெரும் சந்தை.
தனக்கென உயர்ரக தொழில்நுட்ப "சூப்பர் கம்ப்யூட்டர்" உருவாக்கும் 3 நாடுகளில் ஒன்று.
தனக்கென செயற்கைக்கோள் அனுப்பும் 6 நாடுகளில் ஒன்று.
500க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக்கூடங்களைக் கொண்டது.
அமெரிக்காவிற்க்குப்பின் உலகில் அதிகமான மென்பொருள் நிறுவனங்கள் கொண்டது.
மும்பை பங்குச்சந்தையில் மட்டும் 6500க்கும் மேற்பட்ட வணிகங்களைக் கொண்டது.
பால் உற்பத்தியில் உலகில் முதல் இடமும் , உணவு , காய்கறி , பழங்கள் உற்பத்தியில் இரண்டாம் இடம்.
உலகப்பொருளாதாரத்தில் மிக முக்கியமான நாடு, வருடம் 8 சதவீத உயர்வு அடையும் நாடு.
கொள்முதல் செய்வதில் உலகில் 4வது மிகப்பெரும் பொருளாதார நாடு.
வருடம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களை அமெரிக்காவிற்கு அனுப்பும் நாடு.
மருந்துகள் சந்தையிலும் , உற்பத்தியிலும் இரண்டாம் மிகப்பெரும் நாடு.
( சீனா முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது ).
40 லட்சத்திற்கும் மேற்பட்ட நடுத்தர குடும்பங்கள் கொண்ட பொருளாதாரத்தில் முன்னேறும் நாடு.
ஆங்கிலம் பேசுவதில் திறமைமிக்க மக்களைக்கொண்ட நாடு,அதில் இரண்டாம் இடம் பெற்றதுடன் அதிகமான அறிவுத்தகவல் முறைவழி()ல் முன்னேறும் நாடு.
வருடத்திற்கு 1000 திரைப்படங்கள் தயாரிக்கும் நாடு.(அமெரிக்காவை விட அதிகம்).
ரூபாயின் மதிப்பு குறைந்ததாலும், ஆங்கிலப்புலமை அதிகம் பெற்றதாலும் தகவல் மையங்கள்() அதிகம் கொண்ட நாடு.
வரி விலக்குகள் அதிகம் தரும் நாடு.குறிப்பாக வெளிநாட்டு வியாபாரிகளுக்கு.
உலகில் அதிகம் விற்பனை ஆவதும்,அதிகமாக முதலீடு செய்யும் சந்தையாக இந்தியா உள்ளது.