Sunday 31 July 2011

முதல் முத்தம்

முதல் முத்தம்...
அன்று...
அது ஒரு அழகிய மாலை...
செங்கதிர் சூரியன் சுட்டெரிக்காமல்...
வண்ணத்துப்பூச்சிக்கு குளிர் எடுத்தால்
அதை அடக்கும் ஒரு வெப்பத்தில்...
ஆங்காங்கே இருந்த மரங்களின்
சருகுகள் அவளின் கால் கொலுசின்
ஒலியை காற்றில் பரப்பிக்கொண்டிருந்தது...
அவளின் வருகைக்கு அறிகுறியாய்...
அங்கே இருந்த குயில் ஒன்று
ஆலாபனை செய்ய...
தேவதையின் க்ளோனிங் போல் வந்தால்...
எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியின் வெளிப்பாடு
என் உதட்டின் வழியே சிரிப்பாய் மலர...
அருகில் அமர்ந்த அவளிடம் ஆரம்பித்தேன் அரட்டையை...
சற்றும் எதிர்பாராமல் இருக்க...
காதலின் பரிசாய் விரலுக்கு மோதிரம்...
அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்கும் முன்னர்...
அழகாய் கன்னத்தில் தந்த முத்தம்...
என்றும் நினைவில்...

என் நன்றிகள்

என் காதலுக்கு நீ
மதிப்பு தந்து முன்னுரிமை தரவில்லை
ஆனால்...
எனது கவிதைகளும் கற்பனையும்
காதலுக்கே முன்னுரிமை தரும்
வாய்ப்பைத் தந்ததுக்கு
நன்றி...

Saturday 30 July 2011

அன்னை

உயிரணுவிற்கு உதிரம் சொட்ட செய்தவள்...
உயிருக்குள் உயிர் சுமந்தாள்...
கண் விழித்தாலும் நீதான்...
நா விளித்தாலும் நீதான்...
பஞ்சு மெத்தையும் பளிங்கு அறையும்
வேண்டாத எனக்கு...
உன் பட்டு மடியும்...முடி கோதும் விரலும்
அந்த நிமிடமும் சொர்க்கம்..
ஆயிரம் ஆலாபனைகள் ஆண்டவனுக்கு..
கடவுளே பாடும் ஆலாபனை எனக்கு...
அசந்து உறங்கிய பின்...
அவள் தரும் அரவணைப்புக்கு அவளே நிகர்...
இடறி விழுந்தாலும்...
இடர் நேர்ந்து அழுதாலும்...
நான் அழைப்பது உன்னையே...
உலகில் இருக்கும் தூய்மையான
அன்பு...அதில் உனக்கும் பங்கு...
இது எனக்கு மட்டுமல்ல...
அனைத்து உயிருக்கும்...
சமர்ப்பணம்
என் அன்னைக்கு....

காத்திருக்கிறேன்

உன் பார்வை...
உன் மூச்சுக்காற்று...
உன் கூந்தல் மணம்...
உன் கைகோர்த்து...
ஒரு நீண்டதூர நடை...
வாழ்க்கையில் என்று கிடைக்கும்...
காத்திருக்கிறேன்...


Friday 29 July 2011

காதல் "விழுப்புண்"

என் பெயர் நீ சொல்லி
குறுநகை செய்தாய்...
உன் பெயர் நான் சொல்ல
புன்னகைகள் பூத்தாய்...
இதயம் பொங்கிவழியும் அன்பு நீ பொழிய...
மூச்சுமுட்டும் வரை அன்பை நான் பெற்றேன்...
எதையும் எதிர்பாராமல் நீ இருக்க...
என்னுள் வாழும் முட்டாளின் மூளை குழம்ப...
அவன் வென்று...நான் தோற்க...
வெற்றியின் விளைவாய்...
காதலை அவன் என்னுள் பதிய...
தவறும் தோல்வியும் காதலுக்கு நீரூற்ற...
எப்படியோ காதல் வளர்த்தேன்...
அன்றே முடிவு செய்தேன்...
இன்னொரு தோல்வியும் காத்திருக்கிறது என்று...
எதிர்பார்த்ததுபோல் அனைத்தும் நடந்தது...
உன் வாழ்வும் என் வாழ்வும்
நிர்ணயிக்கப்பட்டது போல் தனியே செல்ல...
மார் மீது பாய்ந்த காதல் ஈட்டி...
இதயம் கிழித்ததோ எனக்கு...
தோல்வியுடன் வாழ்கின்றேன்...
என் காதல் "விழுப்புண்" உடன்...

காதலன்...

மூடனுக்கும் முட்டாளுக்கும்
இடைப்பட்ட நிலையில் இருப்பவன்...
காதலன்...

விதி

எல்லாம் விதி....
எதிர்பார்ப்புகள் தோற்கும்போது
மனிதன் சொல்வது..

Thursday 28 July 2011

வெற்றி பெற வேண்டுமா...

வெற்றி பெற வேண்டுமா...
உன் மனசாட்சியை
கவனிக்காதே...

இந்தியா 2020

சாதிக்கு மனித வேடமிட்டு...
சட்டம் போடுபவனும்...
அரசியல் செய்பவனும்...
காவி உடை அணிந்து...
கன்னியும் கட்டிப்புடி வைத்தியம்
காமலீலைகள் செய்பவனும்...
கல்விக்கு பணம் பறித்து...
பகட்டு வாழ்க்கை வாழ்பவனும்...
இந்த தேசத்தில் இருக்கும் வரையில்...
2020 என்ன...
2220 வந்தாலும்
இந்த நாடு ஒரு ந(வ)ல்லரசாக மாறமுடியாது...

முத்த யுத்தம் ..

கன்னத்தில் கைவைத்து அமர்ந்தேன்...
கோபத்தில் "பளார்"என்று அறைந்தாள்...
கோபத்தில் "இச்" என அறைந்தேன்...
பின்பு...
யுத்தம் தொடங்கியது...முத்தங்களாக...


Tuesday 26 July 2011

காதல் நிரந்தரமா

எதுவுமே நிரந்தரம் இல்லாத
என் வாழ்வில்
காதல் மட்டும் என்ன
சிம்மசொப்பனமா...
அதுவும் அப்படிதான்....
முதலில் நீ
உன் கால் கொலுசு
பின் உன் கண்கள்
உன் அன்பு ஆறுதல்
உன் வீடு உன் தாய் தந்தை
என தொடர்ந்து
இப்பொழுது இந்த உலகத்தையும் சேர்த்து
காதலித்துக்கொண்டு இருக்கிறேன்...
எனக்காக உன்னை அது சுமப்பதால்...

விண்ணை நோக்கி செல்ல காத்திருக்கிறேன்..

என்னுள் என்னை அடைத்து
சிறை வைக்க முடியவில்லை...
பூட்டப்பட்ட ஒரு பூமியில்
தனித்து எப்படி வாழ்வது ???
அவளிடம் எதிர்பார்த்த காதலால்...!
இன்று மீண்டும் நான்
என்னை என்னுள் அடைத்துவிட்டு...
விண்ணை நோக்கி செல்ல காத்திருக்கிறேன்..


விலைபோன சரக்கு

இலவசங்களுக்காக விலை
போகும் சரக்கு...
மனிதன்...

கார்ட்டூனிஸ்ட் பாலா சாருக்கு நன்றி

சமத்துவம்

கட்சியின் பதவியில்
சாதி சங்க தலைவர்கள்...
பேசுவது சமத்துவம்...

Monday 25 July 2011

சா"தீ"

ஒரு சில காரணங்கள் மட்டுமே
மனிதனை இன்னும் மனிதனாக
காட்டுகிறது...
கற்பனை
காதல்
கண்ணீர்...
கடைசியாய்
சாதி..
ஆம்..
சாதி இல்லை என்று எதிர்ப்பவனையும்
சாதி வேண்டாம் என்று கூறுபவனையும்...
இன்னும் மனிதராய் மதிக்க
எவரும் முன்வரவில்லை
மனிதர் என்று கூறிக்கொள்வோர்...

God never made man that he may consider another man as an untouchable

என்றும் உன்னுடன்

ஒரு சப்தமான மௌனம்
விழி தேடும் பார்வை...
தோள் சாயும் தருணம்...
கைகள் நீட்டி அணைத்தால்...
விரல் தொட்டு ஸ்பரிசம்...
மூச்சு கலந்த வெப்பம்...
இதழ் தொட்டு முத்தம்...
இதயம் கலந்த காதல்...
உயிர் முடியும் வரை
உன்னுடன்...


Saturday 23 July 2011

தத்தளிப்பு

தண்ணீரில் இருந்து கொண்டே
தத்தளிக்கும் நிலை...
காதல் வயப்பட்ட மீன்...

Wednesday 20 July 2011

தொடக்கம்


முடிந்துபோன காதல் கதையின்
முதல் வரியாய்
அவளின் பெயர்...


Inspired Frm the movie Vinnaithandi Varuvayaa




Tuesday 19 July 2011

என் காதல் சண்டைகள்...

எனக்கும் அவளுக்கும் 
இடையில் நடக்கும் 
காதல் சண்டைகள் அனைத்தும் 
வெயில் காலப் புயலைப்போல...
முடிந்தபின் 
மிகவும் குளுமையாய் அழகாய்...
ஊடல் கொள்வோம்...
என்ன எங்களுக்குள் இருக்கும் 
பனிப்போர்க்கு மட்டும்தான் 
முடிவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது...
என் காதல் பெரிதா???
அவளின் காதல் பெரிதா என்று???

Monday 18 July 2011

நமது கைரேகை போலதான் அனைவரும்...
ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரி...
புரிந்தவன் வெல்கிறான்...
புரியாதவன்...


இதை படித்தபின் முயல்வான் வெற்றிக்காக ...





Saturday 16 July 2011

வாழ்க்கை...?

விடை தெரிந்தும் 


குழப்பமான கேள்வி...


வாழ்க்கை...?


Friday 15 July 2011

கொடுமையான விஷயம்



என்னைப் பொறுத்தவரை...
மிகக் கொடுமையான விஷயம்...
காதலிக்காமல் இருப்பது...
காதலிக்கப்படாமல் இருப்பது...
காதலித்துக் கொண்டிருப்பது...


அதைவிட கொடியது
காதலிப்பதை வேடிக்கை பார்ப்பது...



Thursday 14 July 2011

நம்மால் மட்டுமே இது சாத்தியம்

வடைசுட்ட பாட்டியும் அவளின் வடையும்
மனுநீதி இல்லாத நாட்டில் மனுநீதிச் சோழன் கதையும்
உங்கள் குழந்தைகளுக்கு கூறியது போதும்...
மரம் நட்ட அசோக மன்னனும் அவன் வெட்டிய குளமும்  
போதும்...
சக்திமானும் ஸ்பைடர்மேனும் 
டோரா புஜ்ஜியும் அவளின் குரங்கும் ...
எத்தனை நாள்தான் என் தமிழ் சிறாரின்
காலத்தைக் கடத்தும்...?
இந்திய சுதந்திரம் பற்றி படித்தது போதும்...
லிபியாவின் சுதந்திரம் பற்றி பார்க்கட்டும்...
பிட்டுக்கு மண் சுமந்த கதை போதும்
பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் கதை சொல்லுங்கள்...
அசாஞ்சேவும் அப்துல் கலாமும்
அறிவிற்க்கு ஆதரமாய்...
சே குவேராவும் பிரபாகரனும்
வீரத்தின் விளை நிலமாய்...
தமிழுக்கு காஞ்சி தந்த அண்ணா...
அரசியலுக்கு கக்கனும் காமராசரும்...
பெண்மையின் திண்மைக்கு சூ-கி ...
அன்புக்கு தெரசா என கற்பியுங்கள்...
பதினாறு வயதில் உங்கள் குழந்தை 
" நான் மாற்றுவேன் எனது நாட்டினை"
எனக் கூறும்...
நம்மால் மட்டுமே இது சாத்தியம்...





Tuesday 5 July 2011

மொழி வேண்டுமா???


அன்பும் அரவணைப்பும் 
காட்ட மொழி தேவை இல்லை...
இரு விழிக்கண்ணீரும்...
ஆரத்தழுவிக்கொண்டால்
போதும்...
அதைவிட மொழி வேண்டுமா???

Sunday 3 July 2011

மன்னிப்பாயா...?

                       
                        ஒரு சில காரணங்களுக்காக 
                        மட்டுமே நான் உன்னை
                       விரும்புகிறேன் என்று எண்ணாதே...
                       உன்னைக் காதலிக்கிறேனென்றும் எண்ணிவிடாதே....
                         காரணங்கள் தந்ததும்...
                         காதலிக்க வைத்ததும் நீ...
                     என்ன... என் சார்பில் நான் செய்த குற்றம்...
                     உன்னிடம் கூறாமல் காதலித்தது மட்டுமே...
                        மன்னிப்பாயா???

Saturday 2 July 2011

நானும் அவனும்...


நானும் அவனும்...
பிறந்ததில் இருந்து 
அவன் என்னுடன் இருக்கின்றான்..
நினைவு தெரிந்த நாளிலிருந்து  
அவன் எனக்கு அறிமுகம்...
எந்த ஒரு விஷயத்திலும்...
அவனை கலவாமல் 
இருந்ததில்லை...
இருக்கவும் முடியாது...
அப்படி ஒரு நட்பு...
அப்படி ஒரு பிணைப்பு...
ஆனால் நான் என்ன கூறினாலும்...
முதலாய் அவன் சொல்வது...
ஒரு வேளை....அப்படி ஆனா...
நான் என்ன செய்தாலும்...
"இது சரியில்லயே..."
எனக்கும் உனக்கும் என்னதான்டா பிரச்சனை...
டேய் "மனசாட்சி" உன்னதான் கேட்குறேன்...