Wednesday 31 August 2011

கையேந்திபவன்

இயற்றப்பட்ட சட்டங்கள்
கொடுத்த கோரிக்கைகள்
அறிவிக்கப்பட்ட சலுகைகள்
அரசின் ஆணைகள்
இன்னும் எத்தனையோ...
மக்கள் கைகளை ஏந்திய
நிலையிலேயே வாழ்கின்றனர்..
எதுவும் இன்னும் கிட்டவில்லை...
கையேந்திபவனா நம் நாடு...
இலவசங்களின் வசமாகிவிட்டனர்...
உரிமைகள் மட்டும்தான் பறிக்கப்படவில்லை...
அதற்கும் ஒரு காலம் வரும்...
இரண்டாம் சுதந்திரப் போராய்...



Monday 29 August 2011

கனவுகள்

உறங்குபவனின் கனவுகள்
விழித்துக்கொண்டால்
அதுவே நம்பிக்கையாகவும்
வெற்றியாகவும் மாறும்...
உறக்கம் கலையாத
மனிதன் விழுத்துக்கொண்டால்
மட்டுமே இது சாத்தியம்...
உனது விருப்பு வெறுப்பு
அனைத்தையும் உலகத்திடம் காட்டு...
உலகம் உனதாகும்...


Sunday 28 August 2011

பசி

இல்லாதவனை யாசகனாக..
இருக்கின்றவனை ஆண்டவனாக...
முயலாலாதவனை திருடனாக...
முயன்றவனை வெற்றியாளனாக...
கவலைகளுக்கு கல்லில் உருவம் தந்து
கோரிக்கைகளை வைக்கிறது...
இருதயங்களை உயிருடன்
அறுவை செய்கிறது...
மனிதனையே அடிமையாக்குகிறது
பசி...



சத்தம்

எனது இருதயம்
உன் வலப்புறம் துடிக்க...
உனது இருதயம்
என் இடப்புறம் துடிக்க..
இருவரின் துடிப்பும்
ஒன்றாய் கூவியது...
முத்தச்சத்தங்களாய்..


Wednesday 24 August 2011

முகம்

மற்றவர்களை மகிழ்விக்கும்
ஒருவனின் வாழ்க்கையை
கவனித்தால்...
அவனுடைய ஒவ்வொரு
சிரிப்புக்கு பின்
ஆறாத ரணங்களே அதிகமிருக்கும்...
பிறர் மகிழ்வுக்காக வாழ்வதில்
அவர்களின்
வாழ்வும் மகிழ்ச்சியும் தொடரும்...


Tuesday 23 August 2011

முதல் நாள்...

வெறுப்புகள் உச்சகட்டத்தை அடைந்து
காண்பவரெல்லாம் எதிரிகளாகவும்
விரோதிகளாக...
மகிழ்வாக இருப்பவனைக் கண்டு
வந்த வெறுமை...
ஆழிப்பேரலை போல் வந்த ஆத்திரம்...
உணவை வெறுத்த பசி...
தனிமையில் வந்த கண்ணீர்...
உறங்க முடியாத இரவு...
இப்படியே நகர்ந்தது
அவள் என்னை விட்டுச்சென்ற
முதல் நாள்...



Monday 22 August 2011

என் தமிழ்

ழகரத்தில் வரும்
மொழி அழகும்
கிழவன் கிழவி
கிளவிகளும்..
என் தமிழுக்கே சொந்தம்...
வல்லின மெல்லின இடையினமாய்
தமிழ் , அம்மா , காதல்
என எல்லாம் என் தமிழுக்கே சொந்தம்...
மருந்துகள் இல்லாத காலத்திலே
மாத்திரை கணக்கிட்டது
என் தமிழுக்கே சொந்தம்...
கோடித் தமிழர் இருந்தாலும்
என் தமிழ் என சொல்லுவதே
என் தமிழுக்கு சொந்தம்...
கல்தோன்றி முன்தோன்றாக் காலத்தில் தோன்றியதும்..
கல்தோன்றிய பின் கல்வெட்டுக்களாய் தோன்றியதும்
என் தமிழே...
ஆங்கிலேயனும் அமெரிக்கனும் கற்றுக்கொள்கிறான்
என் தமிழுக்காக...
பகுத்தாறிவாளனும் இறையான்மை எழுதுவான்
என் தமிழுக்காக...
என் உயிரும் தமிழ்...
என் மெய்யும் தமிழ்...
உயிர்மெய்யும் தமிழ்...
அமிழ்தம் அருந்தியது தமிழ்...
சாகாவரம் பெற்றது என் தமிழ்...
உலகப்பொதுமறையும் என் தமிழ்...
உலகு மறையும் வரை மாளாது என் தமிழ்...


நத்தைக்கூடு

நத்தைக்கூடு போல
என் காதல்...
மணல் போல்
உன் முத்தங்களால்
நிரப்புகிறேன்...


சுழற்சி

அது ஒரு பௌர்ணமி இரவு...
அம்மாவின் மூக்குத்தியும்
அம்புலியும் ஒரு சேர ஒளிர்ந்தது...
வீட்டுத் திண்ணையில்
நானும் அவளும்...
அம்மா சொன்னாள்
காக்கா நரி கதையை...
பழகிப்போனது என்றாலும்
அவள் மடியில் அமர காரணமாய் இருந்தது...
தாத்தா சொன்னது நீதிநெறி கதையில் ஒன்றான
விவேகானந்தரின் பிச்சைக்கார அரசனை..
பாட்டி சொன்னாள்
குழல் பிடித்த கண்ணன் கதையை...
நர்த்தனம் ஆடினானாம் பாம்பின் மேல்...
வருடங்கள் உருண்டோடிய பின்
பக்கத்து வீட்டு அக்காவின்
குழந்தையை காண சென்றேன்..
அடுப்படியில் அக்கா நிற்க
குழந்தை தனியாய்
கதை கேட்டுக்கொண்டிருந்தான்...
5.1 டிஜிட்டல் டிவிடியில்...

Sunday 21 August 2011

விதி

எனக்கு விதிக்கப்பட்டது
இதுதான் என்று தொடர்கிறது
என் காதல்.

தனிமையில்...



மழை வெயில் காதல்

மழை வரும் நேரத்தில்
நான் குடை பிடித்தால்...
குடையைத் தட்டிவிட்டு
என் மார்போடு சாய்ந்து நனைகிறாள்...
இதுதான் காதல் என்று...

அன்று நான்
வெயிலில் வியர்வையால் குளித்து
உன்னைக்கண்ட பொழுது...
உன் உதட்டுச்சாயம் துடைத்த
உன் கைக்குட்டையில்...
என் முகம் துடைத்து
எண்ணிலா முத்தங்கள் தந்தாயே...
இதுவும் காதல்தான் என்று...



Saturday 20 August 2011

சுவடுகள்

ஊன் உடைத்து...
ரத்த நாளங்களை பிய்த்து
குருதி கண்டு...
உயிரை மாய்த்து...
இன்னும் ஓயவில்லை...
அந்த அழுகுரல்களும்
மரண ஓலங்களும்
அதன் காரணமாகிய
தோட்டக்களின் சத்தமும்...


Friday 19 August 2011

உனக்கும் எனக்கும்

தீ சுட்டபின் என் விரலுக்கு
உன் உதடு தந்த காற்றே
தென்றல் எனக்கு...
உச்சி வந்த சூரியனுக்கு
நீ தரும் பதிலாய்
நீ உதிர்த்த வேர்வையே
மழை எனக்கு...
இரு விழிக்கவிதை மேல்
கருப்புக் கவிதைகளாய் உன் புருவங்களே
வானவில் எனக்கு..
விழாக்கால வேளையில்
கைகளில் கலகலக்கும் வளையோசையே
இசை எனக்கு...
எனக்காக நீ எழுதிய
ஒவ்வொரு கடிதமும்
கவிதை எனக்கு...
அன்றொரு நாள்
கடற்கரையில் உன் பெயர் எழுதியதே
இன்பம் எனக்கு...
உன் காலடி பட்ட
வாசல் மண்ணும்
பொக்கிஷங்கள் எனக்கு...
நெற்றியில் நீ வைத்த பொட்டு
கறுப்பென்றாலும் அதுவே
நிலவு எனக்கு...
நீ இட்ட கோலத்தில்
பிடித்து வைத்த சாணமும்
சிலை எனக்கு...
நீ வெட்டிப் போட்ட
நகங்கள் அனைத்தும்
சிற்பங்கள் எனக்கு...
தூக்கத்தில் நீ உளரும்
ஒவ்வொரு சிணுங்கலும்
தாய்மொழி எனக்கு...
நம் கண்கள் இரண்டும்
மோதிக்கொள்வதே
மூன்றாம் உலகப் போர் எனக்கு...
நீ தந்த முத்தத்தில்
இதழ் வெடித்து ரத்தம் சிந்தியதே
விழுப்புண் எனக்கு...
நாம் போட்ட சண்டையில்
உன் நகம் தந்த கீரல்கள்
ஒவ்வொன்றும் கல்வெட்டு எனக்கு...
வானொலிப் பாட்டுக்கு
நீ செய்யும் லாலாலா எல்லாம்
பாடல் எனக்கு...
நான் அனுப்பும் ம்ம்ம்
என்ற குறுஞ்செய்திக்கு
உன் குறுநகையே
காவியம் எனக்கு...
மண்மீது தேவதையாய்
என் கைபிடித்த கயவளாய்
காதலி நீ எனக்கு...
நீ விட்டுச்சென்றாலும்
என்னுள் வாழும் காதல்
என்றும் உனக்கு...


Thursday 18 August 2011

காதலும் தனிமையும்

உலகில்
தனிமை என்ற நிலை
வரக்கூடாது என்றுதான்
காதல் தோன்றியது...
ஆனால் எதிர்மறையாய்
காதலே பலரின்
தனிமைக்கு காரணமானது...


Wednesday 17 August 2011

எங்கள் காதல்...

என்னுடைய தவறுகளுக்கு
நான்தான் காரணம் என்று
சொல்லி
நானும் அவளும் இடும்
சண்டையே
எங்கள் காதல்....


Tuesday 16 August 2011

அந்திப்பொழுது

முகில்கள் களைப்பாறும்
நேரம் அது...
மேற்க்கத்திய நாடுகளை நோக்கி
ஆதித்தன் அம்புலிக்கு
வழிவிட்டு செல்ல...
மாலைப்பொழுது மங்கிக்கொண்டு
இரவாகிக் கொண்டிருந்தது...
அவள் விரல் பிடித்து
நகம் கடித்துக்கொண்டிருந்த நேரம்...
நிமிடங்கள் கேட்பாரற்று ஓடிக்கொண்டிருக்க...
அவள் வெண்ணிற நெற்றியின்
கறுப்புப் பொட்டுக்கு எதிராய்...
உச்சியில் நிலவு வந்து நின்றது...
அவள் என் சிகை கோத...
கீழ் இமையைத் தேடி
மேல் இமை சென்றது...
கண் மூடி நான் கிடக்க...
காதல் புரிந்த தருணம் அது...


Saturday 13 August 2011

எல்லாம் காதல்



வெற்றி தோல்விகளின்
களம் தான்
காதல்..
புன்னகைக்கும் கண்ணீருக்கும்
முகவரி தான்
காதல்...
அவளும் நீயும்
மட்டும்மல்ல
காதல்...
நீயும் நீ கொண்ட
தனிமையும்
காதல் தான்...
இருட்டில் வெளிச்சமும்
காதல்தான்...
கல்லாய் இருக்கும்
கடவுளும்
காதல்தான்...
ஆணும் பெண்ணும்
மட்டுமல்ல
காதல்...
தந்தை தமையனும்
தாயின் அன்பும்
காதல்தான்...
அவள் ஊட்டும்
பால்சோறும்
காதல்தான்...
இன்றும் நாளையும்
என்றும் காதல்தான்...

Friday 12 August 2011

பெண்தானா?

வெட்டவெளியில்
குட்டைப் பாவடையும்...
கையில்லா சட்டையும்...
கண்டபடி தெரியும் உடைகள்
அணிந்தவள்...
ஆண்களைப் பற்றிச்சொல்கிறாள்...
ஆண்களின் பார்வை தவறு என்று...

ஸ்பரிசங்கள்

சிறகுகள் வருடினால்
சிரிக்கும் மழலை போல
உன் ஸ்பரிசங்கள் எனக்கு...


Thursday 11 August 2011

மௌனம்

இடைவிடாத இரு இருதயத்தின் துடிப்பு...
காற்றில் அலைபாய்ந்த சருகுகளின் சத்தம்...
அம்புலியை பிரதிபலித்த குளத்தில்
கல் விழுந்த ஓசை...
காலையில் சுற்றித்திரிந்த பறவைகள்
மரக்கிளையில் ஓய்வெடுக்க...
தன்னை மறந்து பாடும் கீர்த்தனைகள் ...
அலறிக்கொண்டு செல்லும் வாகனங்கள்..
இதற்கும் மேல்..
அண்டமே அதிரும் அளவு...
வான் கிழிக்கும் மின்னலும்
அதைத் தொடர்ந்த இடியும்...
அத்தனையும் மறந்து நீடித்தது மௌனம்...
வார்த்தைகள் இல்லாமல்
என் மீது அவள் சாய்ந்த பொழுது...


மனமும் பணமும்

மனமும் பணம் போல
அவ்வப்பொழுது தன்னுடைய
மதிப்பை மாற்றிக்கொள்ளுகிறது...




Monday 8 August 2011

தனிமை

தனிமை என்பது
மகிழ்ச்சியை மறந்து
கவலைகளின் சுவடைப் பற்றிக்கொண்டு
அதற்கான தீர்வுகளைக் காண
ஓலமிட்டபடி திரியும்
ஒரு அபூர்வ நிலை..



திரும்பிப்பார்க்கிறேன்

அம்மா மசித்து தந்த இட்லி சாப்பிட்டு
செம்மண்ணிலும் ஆற்று மணலிலும்
கொட்டாங்குச்சியில் இட்லி செய்து..
அதை சாப்பிடுவதுபோல் சமிக்ஞை செய்து கொட்டியது...
பறந்து சென்ற தட்டானைப் பிடித்து
வாலில் நூல் கட்டி
பறக்கின்ற தட்டானை
பட்டமாய் விட்டு விளையாடியது...
கோலிகுண்டு விளையாட வேண்டுமென்று
கரண்டியில் குழி தோண்டி
அம்மாவுக்கு தெரியாமல் கழுவிவைத்தது...
பலூன் வேண்டுமென்று அடம்பிடித்து வாங்கி
அடுத்த நிமிடமே வெடித்ததும்...
அழுது புரண்டு அளப்பறை செய்தது...
விளையாடும் போது பொம்மையை
அடித்து சத்தம் போடாதே என மிரட்டியது...
வாயிலேயே என்ஜின் சத்தமும்
ஹாரன் அடித்துக்கொண்டும் கார் ஓட்டியது...
அழுதுகொண்டிருந்த குழந்தையை ஆசுவாசப்படுத்தி
ஏன் எனக்கேட்டு...கிள்ளியதற்காகதான் அழுதியா
என மறுமுறை கிள்ளியது...
கருப்பு வெள்ளை படத்தில் வந்த
எம்ஜிஆர் என்ன கலரில் சட்டை போட்டார்
என்று எகத்தாள கேள்வி கேட்டது...
மின்சாரம் இல்லை...எப்படி இந்த
கடிகாரம் மட்டும் ஓடும் என்று
அறிவாய் சந்தேகக் கேள்வி கேட்டது...
அருள் வந்து சாமியாடிய
பக்கத்து வீட்டு அக்காவைப் பார்த்து
அம்மாவின் பின் சென்று ஒளிந்து...
அடுத்த நாள் அக்காவுக்கு
முன் நின்று சாமி கும்பிட்டு சூடம் ஏற்றியது...
குட்டி மீன் என நினைத்து
தவளைப் பிரட்டையை தண்ணித் தொட்டியில்
வளர்த்து திட்டு வாங்கியது...
காலையில் காணாமல் போகும் நிலவை
இரவில் விரலுடன் ஒப்பிட்டுப் பார்த்தது...
இல்லாத காய்ச்சலை வரவைக்க
இறைவனுக்கு வேண்டி லஞ்சம் தந்தது...
பொதி சுமந்த மாட்டுவண்டியின்
பின் சென்று கூடுதல் சுமையாய் தொங்கி விளையாடியது...
நேற்று தந்த பரிட்சைத் தாளில்
இன்று பெய்த மழையில்
கப்பல் செய்து கவிழ்த்து விளையாடியது...
கிட்டிப்புள் விளையாடி
கிழவனின் முகத்தைப் பதம் பார்த்தது...
திருவிழா கூட்டத்தில் தொலைந்தபின்
அம்மா தொலைந்துவிட்டாள் என்று
காவலரிடம் புகார் கொடுத்தது....
குச்சி ஐஸும் குல்பி ஐஸும் சாப்பிட்டு
குச்சிகளை சேமித்து வைத்தது...
புளியம்பழம் தின்ன ஆசைப்பட்டு
வேப்பமர அடியில் தேடித் திரிந்தது...
அரசமர இலையில் பீப்பியும்...
தேங்காய் தொட்டியில் மேளமும்...
மழைக்காலத்தில் முளைத்த காளான்கள்
என்ன மண்ணிற்கு குடையா என யோசித்தது...
தீவிரவாதிகள் தகர்க்க முடியாத ரயிலாய்
நாங்கள் வலம்வந்ததும்...
காக்கா கடி கடித்து மிட்டாய் தின்னதும்...
சாதி மத பேதமின்றி எல்லாரும்
ஒன்றாய் ஒரு வீட்டு உணவினை
பகிர்ந்துண்ணது...
என்றும் திரும்பக் கிடைக்காத
என் கடந்த காலத்தை...
திரும்பிப் பார்க்கிறேன்...இன்னும் குழந்தையாய்...




Sunday 7 August 2011

கால மாற்றம்

எங்கள் ஊரின் ஈபிள் டவர்கள்...
எங்கு சென்றாலும் இருக்கும்...
உச்சி சென்று கீழே பார்த்தால்
அனைவரும் எறும்புதான் எனக்கு...
இடுப்பு டவுசரில் சிறிய
கொடுவாளுடன் மேலே சென்றால்...
கீழே வேண்டிக்கொண்டிருப்பார்கள்
என் நண்பர்கள்...
எனக்காக இல்லை...
நல்ல நுங்கு இருக்கவேண்டும் என்று...
வெட்டி போட்டால்...
சிதறி ஓடுவதை எடுத்து
வெட்டி சாப்பிட்ட அந்த நிமிடங்கள்...
தோட்டக்கார கிழவன் வர...
சிதறிய நுங்கைப் போலவே
நாங்கள் ஓடுவோம்...
காய்ந்த நுங்கின் நடிவில் துளையிட்டால்...
அதன் வழியே உலகமே தெரியும்...
அந்த வயதிலேயே நாங்கள் பொறியாளரானோம்...
ஓட்டை வழியில் குச்சியை ஆக்சிலாய் வைத்தோம்...
ஓட்டுனர் உரிமம் இல்லாமல்
ஊர் சுற்றி வந்தோம்...
இன்றோ இதை என் அக்கா
மகனிடம் சொன்னால்...
அத விடு மாமா நீ...
வா NFS விளையாடலாம் என்கிறான்...

என் கோபங்கள்

மூர்க்கமான வார்த்தைகள்...
எதையும் ஒதுக்கித்தள்ளும் அசட்டுத்தனம்...
யாரையும் மதிக்காத ஒரு முகம்...
வடுக்கள் தரும் சுடுசொற்கள்..
அனைத்தையும் உதறித்தள்ளும் வெறுப்பு...
இறுதியாய் முடிவில் கண்ணீர்
என் கோபங்களின் சுவடுகளாய்...


Saturday 6 August 2011

அன்பே சிவம்

மண்ணில் இருப்பவன்
கடவுள்தான்
மனிதனாய் வாழ்ந்தால்...


நட்பு.

உலக காதலர்களின் துடிப்பு...
வாழ்க்கைக்கு முக்கியமான சேர்ப்பு..
படிப்பில் ஆரம்பித்தால்...
பாடையில் செல்லும் வரை...
பண விரயம் நேர விரயம் என்றாலும்...
அன்பை விரயம் செய்வதில் என்றும் முதலிடம்...
கண்ணீரில் மட்டும் கருமியாய் இருப்போம்...
அழும்போது...
அதைத் துடைக்கும் விரலும் உண்டு...
அடித்து அதை மறக்க வைப்பதும் உண்டு...
அதை நையாண்டி செய்து சிரிக்க வைப்பதும் உண்டு....
பகிர்ந்து உண்ணுவோம்...
பாடி ஆடினோம்...
சண்டைகள்...சிறு கண்ணீர்கள்...
சிரிப்பொலிகளின் செல்லக் கூட்டம் நாங்கள்...
உதவிகளின் உபகரணம் நாங்கள்...
எங்கும் நிறைந்தது எங்கள் துடிப்பு...
அரியரிலும் துணை...
ஆபத்திலும் துணை...
காப்பியங்களிலும் உண்டு..
நாங்கள் காப்பி அடித்தாலும் உண்டு...
விட்டுச் செல்லும் காதலை
விளக்கம் சொல்லி...
வாழ்க்கைக்கு விளக்கம் தரும்...
உறவுகள் இல்லாதவன் இருப்பான்...
ஆனால்...
இவர்கள் இல்லாமல் இல்லை.
எனக்கான் இறுதி நிமிடம் வரை உங்களுடன்...
இந்த பூமிக்கான இறுதி மணித்துளி வரை....
நம் நட்பு...
என் நட்புகளுக்காக...


Friday 5 August 2011

தீண்டாமை..

தீண்டாமை ஒரு பாவச்செயல்...
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்...
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்...
இன்னும் எழுத்துக்களாய் மட்டுமே
அச்சில் கோர்க்கப்பட்டு உள்ளது...

கடவுள்...

கல்லாய் இருந்தால் மட்டுமே கடவுள்...
மண்ணில் இறங்கிவந்தால்
அவரும் மனிதர் தான்....


முரண்

வெறுமையான வாழ்க்கையும்
வெறுக்கப்படும் காதலும்
உலகில் பலருக்கு சொந்தமானது...
தோல்வி காணாத வெற்றியும்
கண்ணீர் காணாத காதலும்
எவருக்கும் கிடைக்காதது...

Thursday 4 August 2011

சிரித்து வாழு...

என்னை நானே தட்டிக்கொடுத்துக்கொள்கிறேன்...
மாளாத கவலைகள்
என்னுள் இருந்தாலும்...
மழை போல மற்றவர்க்கு
மகிழ்ச்சி தரும்பொழுது...
எலே... DONT WORRY BE HAAAAAPPPPYYYY


என் இந்தியா

நாட்டினை சுத்தம் செய்யும்
கழிவுகள் எடுப்பவனும்
குப்பை அள்ளுபவனும்
இருப்பது குடிசைவீட்டில்...
குப்பை போடுபவனும்
குப்பை அள்ளுவதை வேடிக்கை பார்ப்பவனும் இருப்பதோ
மச்சு வீட்டில்....



Rich Gets RICHER,Poor gets POORER

Wednesday 3 August 2011

ஒற்றுமை

ஜாதி இல்லாமல் இருப்பதால் தான்
ஒற்றுமையாக இருக்கிறது...
காக்கைகள்...


Tuesday 2 August 2011

இந்து மதம்...

ஊருக்கு ஒரு குலம்
தெருவுக்கு ஒரு ஜாதி
கும்பிட ஆளுக்கு ஒரு தெய்வம்...
இதுக்கு ஒரு மதம்...
சமூகத்தை சீர்குலைத்ததில்
இந்து மதம் கண்டுபிடித்தவனுக்கு
99 சதவீதம் பங்கு உண்டு...