Tuesday, 6 September 2011
அம்புலி வாழ்க்கை
நிலவுடன் முதல் சந்திப்பு...
அப்பொழுது அகவை நான்கு...
தமிழ் என் நாவில் நர்த்தனம் ஆட
நிலவினை ந்திலா என சொல்லுவேன்..
மடிமேல் என்னை வைத்து
அரியணை அமரச்செய்தால் அன்னை..
நிலவில் அமர்ந்து பாட்டி வடை சுட்டாள்
என ஆரம்பித்தாள் , குறுக்கிட்ட நான்
"வதய யாது வாந்துவா?" என,
காகத்தின் மேல் பழியிட்டு கதை தொடர்ந்தது...
ஆண்டுகள் உருண்டோடிய பின்
எனக்கு அகவை பதினாறு ஆக...
கரித்துக்கொண்டிருந்தாள் அன்னை
என் நடவடிக்கைகளை...
வெளிவந்த நான் தனிமையில்
நிலவும் தனிமையில்...
ஒளிகொடுத்தது என் பாதைக்கு...
உணர்ந்தேன் என்னை...
காலம் கடந்து முதிர்ந்தேன்...
அகவை அறுபதைக்கடந்து தளர்ந்தது...
அம்மா கூறியது நினைவுக்கு வந்தது
இறந்தால் எல்லாம் நிலவுக்குதான் செல்வோம்...
அவளைக் காணப்போகும் மகிழ்ச்சியில்
மணித்துளிகளை எண்ணிக்கொண்டிருந்தேன்..
நாமும் அம்புலி தான்
பௌர்ணமியாய் ஜனனம்
அமாவாசையாய் மரணம்...
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment