உச்சிப்பொழுதின் வேளையில்
கடற்கரையின் நிழலில்
சுண்டல் விற்ற அந்த
ஒற்றைச் சிறுவன்...
அன்னதான மணி அடிக்க
அலறியடித்து வந்த கூட்டத்தில்
தடுக்கி விழுந்த பிஞ்சுக்கால்கள்...
போக்குவரத்து நெரிசலில்
கைக்குழந்தையுடன்
இளம்பெண் ஒருத்தி...
கல்லுடைத்துக் கைகள்
மரத்துப்போன சிறார்கள்...
அடுக்கிவைத்த செங்கலுடன்
ஆறு வயது சிட்டுக்குருவி...
ஆர்ப்பரித்த கைத்தட்டல்களுடன்
பாராட்டி விடைபெற்றனர்
மனமில்லாத பணம்பெற்றவர்கள்...
சுவறில் இருந்த ஓவியங்கள் மட்டும்
உயிருடன் வாழ்ந்துகொண்டு
இருந்தன...
ஓவியனின் கைவண்ணத்தில்...

No comments:
Post a Comment