மூன்று பிரி முடி வகுந்து
பின்னலில் செம்பருத்தி...
இன்று முடி விரித்து அலைகிறாள்
நம் தமிழ் பெண்ணொருத்தி..
மஞ்சள் பூசி குளித்தாய் அன்று
மருந்து போட்டு கிளம்புகிறாய் இன்று...
காணாமல் போன குங்குமமும்
கண்ணீர் விடுகிறதடி...
கொல்லைப்புறத்தின் பூத்த செடி
மெஹந்தியால் கருகிப்போகுதடி
மருதாணி என்ற சொல்லையே
நீ மறந்து போனாயடி...
சோமபானமும் எடுக்கிறாய்
ஏன் எனக் கேட்டால்
நாகரிகம் வளர்ந்துவிட்டது என்கிறாய்..
மேலாடை காணவில்லை
மேற்க்கத்திய மோகத்தால்...
கவலை இல்லையோ உனக்கு
கண்களால் கற்பழித்தால் ...
பெண் என்று உள்ளத்தால்
மட்டும் இருந்தால் போதுமா...?
மறக்காதே பெண்ணே நீயும்
தமிழச்சி தான்...
அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு
கேட்கவில்லை உன்னிடம்...
பெண்ணாய் வாழ்ந்து பாரடி
புகழ் வந்து நிற்கும் உன்னிடம்...
No comments:
Post a Comment