Friday 24 June 2011

விடியல் வந்தது... வெளிச்சம் எப்பொழுது???




விடியல் வந்தும்
வெளிச்சம் இல்லை...
வெள்ளையன் சென்றுவிட்டான்
இங்கு என் நாடு
கொள்ளையனிடம் மாட்டி 
தடம் மாறி தடுமாறி 
செல்கிறது...
பிச்சையெடுப்பவன் கூட மூன்று 
வேளை சாப்பிடுகிறான்...
தன்மானத்திற்காக உழைப்பவன்...
ஒரு வேளை உணவு மட்டும் பார்க்கிறான்..
ஒரு வேளை உணவு
கிடைக்காத மக்களோ கோடி பேர்...
ஒரு வேளை உணவிற்க்கு 
ஆயிரம் ரூபாய் செலவு 
செய்யும் மேல்குடி மக்களும் கோடி பேர்...
"தாழ்த்தப்பட்டவர்கள்"
இது அரசாங்கத்தில் இருந்து மட்டுமல்ல
அகராதியிலிருந்து எடுக்கவேண்டிய வார்த்தை...
அரசியல் தத்துவங்கள்
இன்னும் எழுத்துக்களாகவே உள்ளது...
அண்ணாவும் காந்தியும்
படேல்லும் நேருவும்
இருந்த இடத்தில்...
இனி பாட்டில் சங்கர்
துப்பாக்கி ராமு கத்தி கார்மேகம்
போன்ற "சான்றோர்" வரும் காலம் 
வெகுவிரைவில்...
அன்று ஊழல் என்பது 
அகராதியில் ஒரு வார்த்தை...
இன்று ஊழல் என்பது...
அரசியலில் அன்றாட வாழ்க்கை...
கல்விக்கு சன்மானம் வழங்கிய
மனிதர்கள் இருந்த இடத்தில்
சன்மானம் தந்தால் மட்டும்தான் 
இனி கல்வி 
என்றாகிவிட்டது...
"விடுதலை கிடைத்தது...
விடியல் வந்தது...
வெளிச்சம் எப்பொழுது???"

2 comments:

srinandanp said...

super ya..........

Magdalene said...

nyc thinkin.... really superb...!

Post a Comment