Thursday 14 July 2011

நம்மால் மட்டுமே இது சாத்தியம்

வடைசுட்ட பாட்டியும் அவளின் வடையும்
மனுநீதி இல்லாத நாட்டில் மனுநீதிச் சோழன் கதையும்
உங்கள் குழந்தைகளுக்கு கூறியது போதும்...
மரம் நட்ட அசோக மன்னனும் அவன் வெட்டிய குளமும்  
போதும்...
சக்திமானும் ஸ்பைடர்மேனும் 
டோரா புஜ்ஜியும் அவளின் குரங்கும் ...
எத்தனை நாள்தான் என் தமிழ் சிறாரின்
காலத்தைக் கடத்தும்...?
இந்திய சுதந்திரம் பற்றி படித்தது போதும்...
லிபியாவின் சுதந்திரம் பற்றி பார்க்கட்டும்...
பிட்டுக்கு மண் சுமந்த கதை போதும்
பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் கதை சொல்லுங்கள்...
அசாஞ்சேவும் அப்துல் கலாமும்
அறிவிற்க்கு ஆதரமாய்...
சே குவேராவும் பிரபாகரனும்
வீரத்தின் விளை நிலமாய்...
தமிழுக்கு காஞ்சி தந்த அண்ணா...
அரசியலுக்கு கக்கனும் காமராசரும்...
பெண்மையின் திண்மைக்கு சூ-கி ...
அன்புக்கு தெரசா என கற்பியுங்கள்...
பதினாறு வயதில் உங்கள் குழந்தை 
" நான் மாற்றுவேன் எனது நாட்டினை"
எனக் கூறும்...
நம்மால் மட்டுமே இது சாத்தியம்...





1 comment:

உங்களுள் ஒருவன் said...

நல்ல கருத்து.... ஆனா யாரு பாஸ் கேட்கிற??? எல்லாருக்கும் தன குழந்தை ஒரு engineer இல்ல டாக்டர் என்று சொல்ல தான் பெருமை படுகிறார்கள்... தனது குழந்தை ஒரு போராளியாக.... விடுதலை, கம்யுனிசம், என் அரசியல் பற்றி பேசுவதை குட விரும்ப வில்லை.... இப்படி தான் போகிறது நமது தலைமுறை.... யாரவது ஒருவர் உன்னை போல், இல்லை என்னை போல் பேசினால், தம்பி உங்களுக்கு என்பா இந்த வெட்டி வேலை..... எதாவது படித்து நாலு காசு சம்பாதிக்கிற வழிய பாரு என்று இந்த கேடு கேத்த சமுகம் சொல்லும், ஆனா சொல்லுரவன விட நாம ஒரு பைசா அதிகம்தான் சமபாதிகிறோம்,

நமது பனி இந்த சமுகத்துக்கு உதவு வது.... அதை நாம் செய்து கொண்டு இருப்போம்... போற்றுவோர் போற்றட்டும்..... எசுவோர் எசட்டும்....... நாம் செய்ய வேண்டியதை செய்து கொண்ட இருப்போம்

Post a Comment