Tuesday 25 October 2011

ஒளி தரும் நாளா இது?

வண்ண வண்ண மத்தாப்புகள்
ஊரையே ஒளிரச்செய்து
எங்கெங்கோ வீற்றிருக்கும்
கடவுளுக்கெல்லாம் விளக்குகள் ஒளிர...

கைகளில் வளையங்கள்
புத்தம் புது ஆடைகள்...
காரமும் இனிப்பும் கலந்து
பல சுவையில் பதார்த்தங்கள்...

விண் முட்டும் வானங்கள்....
வெடித்துச்சிதறும் காட்சிகள்...
வீதிதோறும் மகிழ்ச்சியில்...
தீப ஒளித் திரு நாளில்...

பட்டாசுகள் பல செய்து...
மத்தாப்புக்கு மருந்து செய்து...
கைகளில் மருந்து சென்று
கழுவாத கையோடு
கால் வயிறு சோறுக்காக
கல்விச்சாலை செல்லமுடியாமல்..
கால்வயிறு பசி ஆறாமல்..
தின்ற சோறும் நோய்தந்து
உடலின் இருந்த சக்தி குறைந்து...
திக்கற்று இருந்த மழலைகள்
ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்தனர்
விண்முட்டிய வானவேடிக்கை
கீழ்வந்து சாம்பலாய் வீழ்ந்ததை...

-வான்போல் வண்ணம்கொண்டான்.


No comments:

Post a Comment