Monday 24 October 2011

எதிர்வீட்டு ஜன்னல்...

கருத்துப்போன வானம்
மஞ்சள் பூசி மாற வேண்டிய
தருணம் அது...
வருணனுக்கு அது
பிடிக்கவில்லை போல...
கதிரவனுக்கு கதவைத் திறக்காமல்
தாழிட்டு அடைத்து வைத்திருந்தான்
சில நேரம்..
தூரலாய் சில நேரம்...
பொழிவாய் சில நேரம்...
ஜன்னலோரத்தில் இருந்தே
அனைத்தையும் ரசித்தேன்...
எதிர்வீட்டு ஜன்னலில்
அவளும் எனக்கு ஜோடியாய்...
தூரல் தட்டி விளையாடிக்கொண்டிருந்தாள்..
அவள் விரல்பட்ட துளிகள்
கடல் செல்லாமலே முத்தாக மாறும்
மோட்சம் பெற்றன..
விரல்படாத துளிகள்
மண்ணில் விழுந்து
கதறி சத்தம் எழுப்பின...
தாமரை இலைமேல் நீர்த்துளிபோல்
கன்னத்தின் மேல் தனித்துளியாய்
வைரம்போல் மிளிர்ந்தது
மழைத்துளி...
மழை ஓய்ந்த பின்னரும்
சாரலாய் என் மனதை
நனைத்துக்கொண்டிருந்தாள் அந்த
எதிர்வீட்டு ஜன்னல்...

No comments:

Post a Comment