Sunday 7 August 2011

கால மாற்றம்

எங்கள் ஊரின் ஈபிள் டவர்கள்...
எங்கு சென்றாலும் இருக்கும்...
உச்சி சென்று கீழே பார்த்தால்
அனைவரும் எறும்புதான் எனக்கு...
இடுப்பு டவுசரில் சிறிய
கொடுவாளுடன் மேலே சென்றால்...
கீழே வேண்டிக்கொண்டிருப்பார்கள்
என் நண்பர்கள்...
எனக்காக இல்லை...
நல்ல நுங்கு இருக்கவேண்டும் என்று...
வெட்டி போட்டால்...
சிதறி ஓடுவதை எடுத்து
வெட்டி சாப்பிட்ட அந்த நிமிடங்கள்...
தோட்டக்கார கிழவன் வர...
சிதறிய நுங்கைப் போலவே
நாங்கள் ஓடுவோம்...
காய்ந்த நுங்கின் நடிவில் துளையிட்டால்...
அதன் வழியே உலகமே தெரியும்...
அந்த வயதிலேயே நாங்கள் பொறியாளரானோம்...
ஓட்டை வழியில் குச்சியை ஆக்சிலாய் வைத்தோம்...
ஓட்டுனர் உரிமம் இல்லாமல்
ஊர் சுற்றி வந்தோம்...
இன்றோ இதை என் அக்கா
மகனிடம் சொன்னால்...
அத விடு மாமா நீ...
வா NFS விளையாடலாம் என்கிறான்...

No comments:

Post a Comment