Monday 22 August 2011

சுழற்சி

அது ஒரு பௌர்ணமி இரவு...
அம்மாவின் மூக்குத்தியும்
அம்புலியும் ஒரு சேர ஒளிர்ந்தது...
வீட்டுத் திண்ணையில்
நானும் அவளும்...
அம்மா சொன்னாள்
காக்கா நரி கதையை...
பழகிப்போனது என்றாலும்
அவள் மடியில் அமர காரணமாய் இருந்தது...
தாத்தா சொன்னது நீதிநெறி கதையில் ஒன்றான
விவேகானந்தரின் பிச்சைக்கார அரசனை..
பாட்டி சொன்னாள்
குழல் பிடித்த கண்ணன் கதையை...
நர்த்தனம் ஆடினானாம் பாம்பின் மேல்...
வருடங்கள் உருண்டோடிய பின்
பக்கத்து வீட்டு அக்காவின்
குழந்தையை காண சென்றேன்..
அடுப்படியில் அக்கா நிற்க
குழந்தை தனியாய்
கதை கேட்டுக்கொண்டிருந்தான்...
5.1 டிஜிட்டல் டிவிடியில்...

No comments:

Post a Comment